- இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனில் வழங்கப்படும்
- 5 வேரியன்ட்ஸில் கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் பஞ்ச் இவி’யை ரூ. 10.99 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. இது இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கும். இந்த வெளியீட்டுக்கு பிறகு, இந்திய வாகன உற்பத்தியாளரின் போர்ட்ஃபோலியோவில் தற்போது நான்கு முழு-எலக்ட்ரிக் மாடல்கள் உள்ளன.
எக்ஸ்டீரியரில், பஞ்ச் இவி ஆனது அதன் ஐசிஇ வெர்ஷன்னைப் போன்ற சாயலில் இருக்கும். எனினும், இது நெக்ஸான் இவி’யிலிருந்து ஒரு சில டிசைன் குறிப்புகளை கடன் பெற்றுள்ளது, இதில் முழு அகல எல்இடி லைட் பார் ஃப்ரண்ட் பிளாங்க்-ஆஃப் கிரில், ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் கூடிய வெர்டிகல் ஸ்லாட் பேட்டர்ன்ட் கிரில் மற்றும் ஏரோ-டிசைனில் வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்ஸ். கூடுதலாக, நெக்ஸான் இவி போலல்லாமல், பஞ்ச் இவி’யின் சார்ஜிங் ஃபிளாப் முன்புறத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட திறப்பு/மூடுதல் ஃபங்ஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது.
வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, டாடா பஞ்ச் இவி ஆறு வண்ண விருப்பங்களில் தேர்ந்தெடுக்கலாம். இவற்றில், சீவீட் க்ரீன், டேடோனா க்ரே, ஃபியர்லெஸ் ரெட், எம்பவர்ட் ஆக்சைடு மற்றும் ப்ரிஸ்டின் ஒயிட் உள்ளிட்ட ஐந்து மோனோடோன் வண்ணத்தில் கிடைக்கும்.
ஐசிஇ வெர்ஷன்னை விட பஞ்ச் இவி’யில் அதிக அம்சங்களை கொண்டுள்ளது. இது பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் டாடா லோகோ உடன் கூடிய ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டச் கப்பாசிடிவ் பட்டன் கொண்ட எச்விஏசி பேனல். மேலும், இதில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஜூவல் கியர் செலக்டர் டயல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆறு ஏர்பேக்குகள், ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் 360 டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற அம்சங்களையும் பெறுகிறது.
டாடா பஞ்ச் இவி இரண்டு பேட்டரி பேக் 25kWh மற்றும் 35kWh யூனிட் விருப்பங்களுடன் இணைந்த ஒற்றை மோட்டார் அமைப்பாகும். இதில் 25kWh வேரியன்ட் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வெர்ஷன் ஆகவும் மற்றும் பிந்தையது லாங் ரேஞ்ச் டிரிம்ஸில் வழங்கப்படுகிறது.
பேட்டரி பேக் | பவர் | ஏஆர்ஏஐ மைலேஜ் |
25kWh யூனிட் | 80bhp/114Nm | 315km |
35kWh யூனிட் | 120bhp/190Nm | 400km |