- புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கிடைக்கும்
- 2024 இல் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் இவியில் வேலை செய்து வருகிறது. இப்போது, பொதுச் சாலைகளில் ஸ்பாட் டெஸ்ட் என்பது, அதன் இன்டீரியரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் பஞ்சின் ப்ரோடோடைப் ஆகும்.
டாடா பஞ்ச் இன்டீரியர்
இதன் கேபினைப் பார்த்ததில், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்தது. ஸ்டீயரிங் வீலுக்கான புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு கர்வ் எஸ்யுவி கான்செப்டுடன் அறிமுகமானது மற்றும் எதிர்காலத்தில் அனைத்து டாடா கார்ஸிலும் பயன்படுத்தப்படலாம். பஞ்ச் தவிர, நெக்ஸானின் ஸ்பை ஷாட்ஸும் இதேபோன்ற டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.
பஞ்ச் இவியின் எக்ஸ்டீரியர் மாற்றங்கள்
பஞ்சின் ஒட்டுமொத்த ஐசிஇ வெர்ஷனைப் போலவே இருக்கும் அதே வேளையில், இவி பல்வேறு காட்சி சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். படங்களில் காணப்படுவது போல், பஞ்சின் எலக்ட்ரிக் வெர்ஷன், ரியர் டிஸ்க் ப்ரேக்ஸுடன் புதிய ஃபைவ்-ஸ்போக் அலோய் வீல் வடிவமைப்பைப் பெறும்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி வேலையில் உள்ளது
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் பஞ்ச் மைக்ரோ-எஸ்யுவியின் சிஎன்ஜி வேரியண்ட்டையும் காட்சிப்படுத்தியது. இந்த அல்ட்ரோஸ் சிஎன்ஜி ரூ.7.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. , பஞ்ச் சிஎன்ஜி வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சின் சிஎன்ஜி வெர்ஷன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்