- இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது
- ரூ. 21,000 டோக்கன் தொகையை செலுத்தி புக் செய்யலாம்
சற்று முன்பு டாடா தனது பஞ்ச் இவி’யை இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. இது ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவார்ட் மற்றும் எம்பவார்ட்+ என ஐந்து வேரியன்ட்ஸில் வழங்கப்படும். இந்த சப்-ஃபோர் எலக்ட்ரிக் எஸ்யுவி’யை ரூ. 21,000 டோக்கன் தொகையை செலுத்தி ஜனவரி 21 முதல் இதன் டெலிவரி தொடங்கப்படும்.
டாடா மோட்டார்ஸ் புதிய பஞ்ச் இவியை 25kWh மற்றும் 35kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் வழங்குகிறது. இதன் 25kWh பேட்டரியில் 315 கிமீ மற்றும் 35kWh பேட்டரியில் 421 கிமீ வரை ஏஆர்ஏஐ மைலேஜ் சான்றளிக்கப்பட்டது. இதன் 25kWh மோட்டாருடன் 80bhp மற்றும் 114Nm டோர்க், 35kWh மோட்டாருடன் 120bhp மற்றும் 190Nm டோர்க்கை வெளிப்படுத்தும்.
சிட்றோன் eC3 போட்டியாளரான பஞ்ச் இவி’க்கு இதில் ஒரு பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் டாடா லோகோ உடன் கூடிய ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் லெதர்ரெட் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் போன்ற புதிய அம்சங்களுடன் கிடைக்கின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்