-5 வேரியன்ட்ஸில் வழங்கப்டுகின்றன
-ஆரம்ப விலை ரூ.10.99 லட்சம்
டாடா மோட்டார்ஸ் தனது 4வது முழு மின்சார தயாரிப்பான பஞ்ச் இவி’யை கடந்த வாரம் இந்தியாவில் லான்ச் செய்தது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இப்போது நாடு முழுவதும் பஞ்ச் இவி’யின் டெலிவரிகள் தொடங்கபட்டன.
டாடா பஞ்ச் இவி ஆனது ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவார்ட் மற்றும் எம்பவார்ட்+ ஆகிய 5 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதில் ஸ்மார்ட், ஸ்மார்ட்+ ஸ்டாண்டர்ட் வெர்ஷனிலும் மீதமுள்ள மூன்று வேரியன்ட்ஸில் ஸ்டாண்டர்ட் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷனில் கிடைக்கின்றன.
பஞ்ச் இவி’யில் 25kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 315 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இரண்டாவதாக, இது 35kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 421 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இதன் லாங் ரேஞ்ச் வெர்ஷன் 190Nm டோர்க்கை ஜென்ரெட் செய்கிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, டாப்-ஸ்பெக் எம்பவர்ட்+ வேரியன்ட்டில் ஒரு பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இதில் ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரீஜென் மோட்ஸ் கொண்ட லோ-பேடில் ஷிஃப்டர்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டச் அடிப்படையிலான எச்விஏசி பேனல் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்