- பஞ்ச் சிஎன்ஜி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் ஷோகேஸ் செய்யப்பட்டது
- நிறுவனம் சமீபத்தில் அல்ட்ரோஸ் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது
டாடா பஞ்ச் சிஎன்ஜி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
டாடா இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பஞ்ச் மற்றும் அல்ட்ரோஸின் சிஎன்ஜி வெர்ஷளை காட்சிப்படுத்தியது. நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அல்ட்ரோஸ் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் பஞ்ச் சிஎன்ஜி அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
டாடா பஞ்ச் சிஎன்ஜி ஸ்பை இமேஜஸ்
சிஎன்ஜி மூலம் இயங்கும் பஞ்சின் படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன, இது பொதுச் சாலைகளில் சோதனை செய்து பார்க்கப்படுகிறது. படங்களில் அதன் கண்ணாடியில் சிஎன்ஜி ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அல்ட்ரோஸ் சிஎன்ஜி போலவே, ஸ்பேர் வீல் பூட்டின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது, இது பஞ்சின் சிஎன்ஜி பதிப்பு என்பதைக் குறிக்கிறது.
டாடா பஞ்ச் சிஎன்ஜி இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளிப்படுத்தியது, பஞ்ச் சிஎன்ஜி 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 84bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்கும். சிஎன்ஜி மோடில் இது 76bhp மற்றும் 97Nm டோர்க்கையும் வழங்கும். இது பைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட்டுடன் இணைக்கப்படும்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் லாஞ்ச்
60 லிட்டர் கபாஸிட்டி கொண்ட பஞ்ச் சிஎன்ஜி இரண்டு சிலிண்டரில் வழங்கப்படும். மிகப்பெரிய அப்டேட் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகும், இது பஞ்சின் பெட்ரோல் வெர்ஷனில் இல்லை. இந்த மாடலில் ஆறு ஏர்பேக்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 16 இன்ச் அலோய் வீல்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், ஹைட் அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் மற்றும் செவன் இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கிடைக்கும். வரவிருக்கும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதும், டாடா பஞ்ச் சிஎன்ஜி வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜிக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்