- பஞ்ச் சிஎன்ஜி பல்வேறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜி உடன் கிடைக்கும்
விரைவில் டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளன. இது 2023 இன் ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் காட்சிபடுத்தப்பட்டது. தேர்ந்தெடுத்த டீலர்ஷிப்ஸிடம் பஞ்ச் சிஎன்ஜியின் புக்கிங் தொடங்கியது.
டாடா பஞ்ச் சிஎன்ஜி ஃபீச்சர்ஸ்
அல்ட்ரோஸ் சிஎன்ஜி போலவே இதுவும் பல்வேறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும் பெட்ரோல் வெர்ஷன்ஸில் இருக்கும் ஃபீச்சர்ஸை விட சிஎன்ஜியில் அதிக ஃபீச்சர்ஸ் வழங்கப்படலாம். இதில் 6 ஏர்பேக்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 16 இன்ச் அலோய் வீல்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் வரலாம்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி இன்ஜின்
பஞ்ச் சிஎன்ஜியில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல் இன்ஜினில் ஃபைவ்- ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுருக்கும். சிஎன்ஜி மோடில், இந்த இன்ஜின் 76bhp மற்றும் 97Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும். பஞ்ச் சிஎன்ஜி புத்தம் புதிய ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் வரும். இதன் போன்னெட்டின் கீழ் இரண்டு 30 லிட்டர் டேங்க்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன, இது பூட்டில் அதிக ஸ்பேஸை அளிக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்