- நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- வாய்ஸ்-அசிஸ்டட் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களைப் பெறுகிறது
டாடா மோட்டார்ஸ் இறுதியாக இந்திய மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிஎன்ஜி எஸ்யுவியின் விலை ரூ.7.10 லட்சம் முதல் டாப்-ஸ்பெக் வேரியண்ட்க்கு ரூ.9.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்லும். நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கும், பஞ்ச் சிஎன்ஜி ஆனது அல்ட்ராஸ் சிஎன்ஜியைப் போலவே ட்வின் சிலிண்டர் டெக்னாலஜியுடன் அறிமுகமாகியுள்ளது. தமிழ்நாட்டின் டாப் 10 நகரங்களில் பஞ்ச் சிஎன்ஜியின் ஆன்-ரோடு விலையை பார்ப்போம்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி ஆன்ரோடு விலை
நகரங்கள் | ஆன்ரோடு விலை |
சென்னை | ரூ.8.29 முதல் ரூ.11.26 லட்சம் வரை |
கோயம்புத்தூர் | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
மதுரை | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
சேலம் | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
திருச்சி | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) | ரூ.7.55 முதல் ரூ.10.27 லட்சம் வரை |
வேலூர் | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
தூத்துக்குடி | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
திருப்பூர் | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
ஈரோடு | ரூ.8.28 முதல் ரூ.11.25 லட்சம் வரை |
டாடா பஞ்ச் சிஎன்ஜி இன்ஜின் விவரங்கள்
பஞ்ச் சிஎன்ஜி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது பெட்ரோல் மோடில் 84bhp மற்றும் 113Nm டோர்க் மற்றும் சிஎன்ஜி மோடில் 72bhp மற்றும் 103Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனில் இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
டாடா பஞ்ச் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
பஞ்ச் சிஎன்ஜியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்,வாய்ஸ்-அசிஸ்டட் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. இது சிஎன்ஜி மோடில் டைரக்ட் ஸ்டார்ட் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்ஸுடன் பெறலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்