- இதன் ஆரம்ப விலை 7.10 லட்சம் ரூபாய்
- பஞ்ச் சிஎன்ஜி ட்வின் சிலிண்டர் டெக்னாலஜி கொண்டது
டாடா பஞ்ச் சிஎன்ஜி வெளியீடு மற்றும் விலை விவரங்கள்
டாடா சமீபத்தில் பஞ்ச் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.7.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, மேலும் இது ப்யூர், அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம், அகாம்ப்லிஷ்ட் மற்றும் அகாம்ப்லிஷ்ட் டாஸ்ல் எஸ் ஆகிய ஐந்து வேரியண்ட்சீல் கிடைக்கிறது.
பஞ்ச் சிஎன்ஜி எவ்வளவு மைலேஜ் தரும்?
பஞ்ச் சிஎன்ஜி லிட்டருக்கு 26.9 கி.மீ ஃப்யூல் எஃபிஷியன்சியை வழங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஏஆர்ஏஐ சேர்ந்தவை என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
புதிய பஞ்ச் சிஎன்ஜி இன்ஜின் மற்றும் செயல்திறன்
டாடா பஞ்ச் சிஎன்ஜி 1.2 லிட்டர், த்ரீ சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 84bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மோடில் 76bhp பவரையும், 95Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடலை விட அதிக அம்சங்களை கொண்டுள்ளது
ஸ்டாண்டர்ட் பெட்ரோல் மாடலை விட பஞ்ச் சிஎன்ஜி சில கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. இதில் வாய்ஸ்- அசிஸ்டட் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்ஸ், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய ஏழு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 16-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்