- ரூ.7.10 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும்
- ஐந்து வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் பஞ்ச் ஐசிஎன்ஜியை அதிகாரப்பூர்வமாக ரூ.7.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிஎன்ஜி-இயங்கும் மைக்ரோ எஸ்யுவி ஆனது ஸ்டாண்டர்ட் பெட்ரோல் வெர்ஷன்ஸில் கூடுதல் அம்சங்களுடன் ஐந்து வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையில், அம்ச பட்டியல் மற்றும் விலைகளுடன் அனைத்து வேரியண்ட்ஸையும் பட்டியலிட்டுள்ளோம்.
டாடா பஞ்ச் ப்யூர் சிஎன்ஜி - ரூ. 7.10 லட்சம்
- டூயல் ஏர்பேக்ஸ்
- இபிடி உடன் ஏபிஎஸ்
- ரியர் பார்க்கிங் சென்சார்
- ஐசோஃபிக்ஸ்
- கீ உடன் சென்ட்ரல் லொக்கிங்
- ப்ரேக் ஸ்வே கண்ட்ரோல்
- ஃப்ரண்ட் பவர் விண்டோஸ்
- டில்ட் ஸ்டீயரிங்
- 90-டிகிரி டோர் ஓபனிங்
- ரியர் ஃப்ளாட் ஃப்ளோர்
- எல்இடி இண்டிகேட்டர்ஸ்
- டோர், வீல், அர்ச், சில்கிளாட்டிங்
டாடா பஞ்ச் அட்வென்ச்சர் சிஎன்ஜி - ரூ. 7.85லட்சம்
- 3.5-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- ஃபோர் ஸ்பீக்கர்ஸ்
- ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ்
- யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்
- எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்ஸ்
- ஆல் பவர் விண்டோஸ்
- ஃபொலொ-மி-ஹோம் ஹெட்லேம்ப்ஸ்
- ஆன்டி-க்ளேர் ஐஆர்விஎம்
- ஃப்லிப் கீ உடன் சென்ட்ரல் ரிமோட் லொக்கிங்
- ஃபுல் வீல் கவர்ஸ்
- பாடி-கலர்ட் ஓஆர்விஎம்
டாடா பஞ்ச் அட்வென்ச்சர் ரிதம் சிஎன்ஜி – ரூ. 8.20 லட்சம்
- 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- டூ ட்வீட்டர்ஸ்
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
டாடா பஞ்ச் அகாம்ப்லிஷ்ட் சிஎன்ஜி - ரூ. 8.85லட்சம்
- எல்இடி டெயில் லேம்ப்ஸ்
- ஃப்ரண்ட் ஃபோக் லேம்ப்ஸ்
- 15-இன்ச் வீல்ஸ்
- புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப்
- ஒன் டச் –டௌன் டோர் விண்டோ
- டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட்மென்ட்
- ஃப்ரண்ட் டைப் ஏ மற்றும் சி யுஎஸ்பி
- சென்டர் டைப் ஏ யுஎஸ்பி
- ஃப்ரண்ட் சீட் ஆர்ம்ரெஸ்ட்
டாடா பஞ்ச் அகாம்ப்லிஷ்ட் டாஸ்ல் எஸ் சிஎன்ஜி - ரூ. 9.68லட்சம்
- 16-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ்
- எல்இடி டிஆர்எல்ஸ்
- ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்
- ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ்
- ரெயின் சென்சிங் வைப்பர்ஸ்
- வாய்ஸ் கமாண்ட்ஸுடன் எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் சன்ரூஃப்
- ரூஃப் ரெயில்ஸ்
- ஷார்க் ஃபின் ஆண்டெனா
இன்ஜின் மற்றும் டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி விவரக்குறிப்புகள்
பஞ்ச் ஐசிஎன்ஜி ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.இந்த மோட்டார் சிஎன்ஜி மோடில் 72bhp மற்றும் 103Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்கிறது.இந்த அப்டேடட்இன்ஜின் மூலம், பஞ்ச் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி, சிட்ரோன் C3 மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு எதிராகப் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்