- வெறும் 34 மாதங்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையானது
- இந்தியாவில் இதன் விலை ரூ.6.13 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
டாடா பஞ்ச் வெறும் 34 மாதங்களில் 4 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ 6.13 லட்சம் மற்றும் இது அக்டோபர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
டாடா பஞ்ச் சிட்ரோன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்ஸுடன் போட்டியிடுகிறது. டாடா பஞ்ச் அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2022 இல் 1 லட்சம் யூனிட் விற்பனையைக் கடந்தது. அதன்பிறகு, 2023 மே மாதத்தில் 2 லட்சம் யூனிட்களும், 2023 டிசம்பரில் 3 லட்சம் யூனிட்களும் விற்பனையானது. குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் டாடா பஞ்ச் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது, இது அதன் செக்மென்ட்டில் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
டாடா பஞ்சின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இது பல ஃப்யூல் ஆப்ஷனில் கிடைக்கும். இந்த மாடல் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் இவி வெர்ஷனில் கிடைக்கிறது. இவி மற்றும் டூயல்-சிஎன்ஜி சிலிண்டர் வெர்ஷன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாக, இது ஒரு சிலிண்டர் சிஎன்ஜி டேங்கில் மட்டுமே கிடைத்தது.
டாடாவின் கூற்றுப்படி, பஞ்ச் மாடலின் மொத்த விற்பனையில் 53 சதவீத பெட்ரோல் வேரியன்ட்ஸ், சிஎன்ஜி வேரியன்ட்ஸ்க்கு 33 சதவீதமும், இவி வேரியன்ட்ஸ்க்கு 14 சதவீதமும் உள்ளன. சுவாரஸ்யமாக சுமார் 21 சதவீத வாடிக்கையாளர்கள் பஞ்ச் இவியை தங்கள் முதல் காராக வாங்கியுள்ளனர்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்