- அக்டோபர் 2021 இல் தொடங்கப்பட்டது
- 4 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
இன்று, டாடா மோட்டார்ஸ் அசெம்பிளி லைனில் இருந்து பஞ்சின் 2,00,000வது யூனிட்டை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 மாதங்களுக்குப் பிறகு வருகிறது. அக்டோபர் 2021 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த மாடல் காம்பாக்ட் எஸ்யுவி பிரிவில் வளர்ந்து வரும் பிரபலத்தைப் பார்த்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பஞ்ச் பிராண்டின் எஸ்யுவி வரிசையின் இளைய உறுப்பினராகவும், டாடா மோட்டார்ஸின் இரண்டாவது சிறந்த விற்பனையான மாடல்ஸாகவும் உள்ளது.
இந்த காம்பாக்ட் எஸ்யுவி ஆனது 82bhp மற்றும் 112Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும் BS6 ஃபேஸ் 2 மேம்படுத்தப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மற்றும் ஏஎம்டீ யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
பஞ்ச்இன் சிஎன்ஜிமாறுபாட்டை விரைவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். டாடா பஞ்ச் சிஎன்ஜி பதிப்பை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. ஆல்ட்ரோஸ் சிஎன்ஜிக்கு பிறகு டாடாவிடமிருந்து இரட்டை சிலிண்டர் டெக்னாலஜி வழங்கும் இரண்டாவது சிஎன்ஜி வாகனம் இதுவாகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்