- வரும் மாதங்களில் நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகமாகலாம்
- இது இந்தியாவின் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி கார் ஆகும்
டாடா மோட்டார்ஸ் அதன் சிஎன்ஜி வரிசையுடன் இந்திய மார்க்கெட்டில் தனது நிலையை வலுப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. இந்த இந்திய கார் தயாரிப்பாளர் சமீபத்தில் நாட்டின் முதல் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்களான டியாகோ மற்றும் டிகோர்க்கான முன்பதிவுகளை தொடங்கினார், இப்போது நிறுவனம் அதன் பிரபலமான மாடலான நெக்ஸானின் சிஎன்ஜி கான்செப்ட்டை காட்சிப்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி ஷோவில் டாடா நிறுவனம் நெக்ஸான் ஐசிஎன்ஜி கான்செப்ட்டைக் மக்களுக்கு காட்டியது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது நாட்டின் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி கார் ஆகும். இந்த மாடலில் நிறுவனத்தின் சிக்னேச்சர் ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜி இருக்கும், இது 60 லிட்டர் தண்ணீரை வைத்திருக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய சிஎன்ஜி கார் தோராயமாக 230 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டதாக இருக்கும், மேலும் மேம்பட்ட இசியூ, சிஎன்ஜியில் மோடில் டைரக்ட் ஸ்டார்ட் ஃபங்ஷன், இரண்டு எரிபொருள்களுக்கு இடையே ஆட்டோமேட்டிகாக மாறுதலின் செயல்பாடு, மாடுலர் ஃப்யூவல் ஃபில்டர் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்த புதிய சிஎன்ஜி கார் என்ஜிவி1 இன் யுனிவர்சல் டைப் நொஸல் காரணமாக விரைவாக கேஸ்ஸை நிரப்பும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் பிராண்ட் கூறியுள்ளது.
நெக்ஸான் சிஎன்ஜி தொடர்பான தகவல்களை டாடா இதுவரை வெளியிடவில்லை. இதன் பெட்ரோல் வெர்ஷன் 1.2 லிட்டர், ஃபோர் சிலிண்டர், டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது 118bhp பவர் மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. லான்ச்க்கு பிறகு, டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்