- 2017 இல் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது
- 2023 இல் பெரிய மாற்றம் கண்டறியப்பட்டது
டாடா நெக்ஸானின் 7 லட்சம் யூனிட்கள் விற்பனை முடிந்ததை கொண்டாடும் வகையில், ரூ.1 லட்சம் வரை பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. டாடா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் நெக்ஸான் ஐ அறிமுகப்படுத்தியது. புள்ளிவிவரங்களைப் பற்றி பேசினால், நீண்ட காலமாக விற்பனையில் இருந்த இண்டிகா, சுமோ மற்றும் சஃபாரி போன்ற வாகனங்களை விட்டுவிட்டு, இன்றுவரை டாடாவின் வெற்றிகரமான கார் இதுவாகும்.
காரை முன்பதிவு செய்தவர்களுக்கும், இப்போது வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இந்த சலுகைகளை டாடா வழங்கி வருகிறது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சலுகைகள் வேரியன்ட்டிற்கு வேரியன்ட் மாறும் மற்றும் இது ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும் தகவலுக்கு, நெக்ஸானின் 99 வேரியன்ட்ஸ் உள்ளன மற்றும் அவற்றின் விலையில் உள்ள வித்தியாசம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
டாடா செப்டம்பர் 2023 இல் நெக்ஸான்க்கு ஒரு மிகப்பெரிய புதுப்பிப்பை வழங்கியது, இதில் புதிய எக்ஸ்டீரியர் டிசைன், அம்சங்கள் மற்றும் டிசிடீ உடன் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை அடங்கும். நெக்ஸான் ஆனது குளோபல் என்கேபில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது, அதே நேரத்தில் அதன் இவி வெர்ஷன் சமீபத்தில் பாரத் என்கேபில் 5-ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்