- நெக்ஸான் ஏஎம்டீ வெர்ஷனில் ஐந்து புதிய வேரியன்ட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன
- இதன் டார்க் எடிஷன் ரேஞ்ச் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ரேஞ்சில் ஐந்து புதிய வேரியன்ட்ஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. கார் தயாரிப்பாளர் பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஏஎம்டீ வெர்ஷன்னை சேர்த்துள்ளார், இது முன்பு கிரியேட்டிவ் வேரியன்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியன்ட்ஸில் மட்டுமே கிடைத்தது. நெக்ஸான் டார்க் எடிஷன் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ. 11.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலிருந்து தொடங்குகிறது.
பெட்ரோல் வரிசையில், நெக்ஸான் ஸ்மார்ட்+, ப்யூர் மற்றும் ப்யூர் S ஆகியவை இப்போது ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனின் விருப்பத்தைப் பெறுகின்றன. இதேபோல், டீசல் வரம்பில், ஏஎம்டீ வேரியன்ட்ஸில் இப்போது ப்யூர் மற்றும் ப்யூர் S வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸில் ஏஎம்டீ யூனிட் சேர்க்கப்படுவதைத் தவிர, டாடா நெக்ஸானில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடல் இப்போது மொத்தம் 95 ட்ரீம்ஸில் (ஆம், நீங்கள் படித்தது சரிதான்) வழங்கப்படுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிஏ (டிசிடீ) டிரான்ஸ்மிஷன் விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டீ வேரியன்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
நெக்ஸான் பெட்ரோல் ஸ்மார்ட் ப்ளஸ் | ரூ. 10 லட்சம் |
நெக்ஸான் பெட்ரோல் ப்யூர் | ரூ. 10.50 லட்சம் |
நெக்ஸான் பெட்ரோல் ப்யூர் S | ரூ. 11 லட்சம் |
நெக்ஸான் டீசல் ப்யூர் | ரூ. 11.80 லட்சம் |
நெக்ஸான் டீசல் ப்யூர் S | ரூ. 12.30 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்