- முன்பதிவு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கபடும்
- ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: எக்ஸ்டீரியர் டிசைன் மற்றும் ஸ்டைலிங்
முன்பக்க திசுப்படலம் முதன்முறையாக ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப் ஃபங்ஷன்ஸை பெறுகிறது, அதனுடன் போன்னெட்டின் இருபுறமும் அதிகமாக வைக்கப்படும் வரிசைமுறை டர்ன் இண்டிகேட்டர்ஸ். சைட்டில் புதிய அலோய் வீல்ஸ் மற்றும் புதிய எக்ஸ்டீரியர் சாயலுடன் உச்சரிக்கப்பட்டுள்ளது. நெக்ஸானின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இப்போது 208 மி.மீ என அளவிடப்பட்டுள்ளதாகவும் டாடா கூறியுள்ளது.
ரியரில், எல்இடி டெயில் லேம்ப்ஸின் Y-பேட்டர்ன் உடன் ஒரு இல்லுமினேட்டட் ஸ்ட்ரிப் இணைக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு ஸ்டாப் லேம்ப் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பர் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் வெர்டிகல்லி அடுக்கப்பட்ட ரிஃப்ளெக்டர்ஸ் மற்றும் ரிவர்ஸ் லேம்ப்ஸ் ஆகியவை அடங்கி உள்ளது. மேலும், ரியர் வைப்பர் பின்புற ஸ்பாய்லரின் கீழ் மறைக்கப்பட்டுள்ளது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்ஸ் மற்றும் ஃபீச்சர்ஸ்
நெக்ஸானின் கேபின் புதிதாக வடிவமைக்கப்பட்ட டாஷ்போர்டு லேஅவுட்டுடன் மூன்று வண்ணங்களில் பெறுகிறது. மேல் அடுக்கு பிளாக் நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் போர்ஷனில் க்ரே நிற இன்சர்ட்ஸைப் பெறுகிறது. டாஷ்போர்டின் பாதியானது இண்டிகோ நிறத்தில் முடிக்கப்பட்ட சாஃப்ட்-டச் சர்ஃபேஸை கொண்டது. கர்வ்வில் காணப்படுவது போல் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், இல்லுமினேட்டட் லோகோவைக் கொண்ட ப்ரொடக்ஷன்-ஸ்பெக் நெக்ஸான் உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ப்யூர், கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ மற்றும் ஃபியர்லெஸ் வேரியண்ட்ஸில் கிடைக்கும். ஸ்டீயரிங் வீலுக்கு முன்னால் ஒரு ஃபுல்லி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் தனிப்பயனாக்கக்கூடிய டிஸ்ப்ளே ஸ்கிரீளைப் பெறுகிறது, அதேசமயம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் பெரிதாக இப்போது 10.25 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. ஏர்கான் பேனல் ஒரு டச் அடிப்படையிலான யூனிட் மற்றும் சென்டர் கன்சோலில் வயர்லெஸ் சார்ஜிங் பேட் உள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட்ஸை கொண்டுள்ளது.
பாதுகாப்பு முகப்பில், நெக்ஸானில் ஆறு ஏர்பேக்ஸ் ஸ்டாண்டர்டாக பொருத்தப்பட்டுள்ளன, மேலும் டாப் வேரியண்ட்ஸில் ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்ஸ், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான்: இன்ஜின் விருப்பங்கள்
முன்பு இருக்கும் மாடலை போலவே, 2023 நெக்ஸான் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸுடன் கிடைக்கும். இது பெட்ரோலில் 118bhp மற்றும் 170Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ கியர்பாக்ஸ் மற்றும் ஷிப்ட்-பை-வயர் டெக்னாலஜியுடன் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டீசல் இன்ஜின் 113bhp மற்றும் 260Nm டோர்க்கை வெளியிடுகிறது மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோட்ஸையும் பெறுகிறது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் போட்டியாளர்கள்
வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் போது, புதிய நெக்ஸான் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, கியா சோனெட், நிசான், ரெனோ கைகர் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்