- இம்மாதம் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம்
- இது நான்கு புதிய வேரியண்ட்ஸில் அறிமுகப்படுத்தப்படுகிறது
டாடாவின் இந்த மாதத்திற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காரான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன, இதை தேர்ந்தெடுக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்ஸில் பதிவு செய்யலாம். இது செப்டம்பர் நடுப்பகுதியில் இவி எடிஷனில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இதில் வழங்கப்படும் வேரியண்ட் வாரியான அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
இது ஒரு இந்திய கார் தயாரிப்பாளரின் இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய லான்ச்சாக இருக்கும். தற்போதைய மாடலை விட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் புதிய அம்சங்களை வாடிக்கையாளர்கள் காண்பார்கள். எக்ஸ்டீரியரில் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் சில குறிப்பிடத்தக்க புதிய மாற்றங்களைப் பெறும். புதிய நெக்ஸான் டிஆர்எல்ஸுடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ரிடிசைன் செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்பர், புதிய அலோய் வீல்ஸ், Y-வடிவ எல்இடி டெயில்லைட்ஸை இணைக்கும் லைட் ஸ்ட்ரிப் மற்றும் எக்ஸ்டெண்டெட் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் இன்டெக்ரேட்டட் ரியர் வைப்பர் ஆகியவற்றைப் பெறும்.
வேரியண்ட்ஸ் பற்றி பேசுகையில், புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள XE, XM போன்ற அதன் ஸ்டாண்டர்ட் மாடல் வேரியண்ட்ஸின் பெயர்களை டாடா மாற்றியுள்ளது. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. கூடுதலாக இதில் ஆப்ஷனல் ட்ரிம்ஸான ப்ளஸ் மற்றும் S வேரியண்ட்ஸும் வழங்கப்படும்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் டாடா லோகோ மற்றும் ரிடிசைன் செய்யப்பட்ட எச்விஏசி கண்ட்ரோல் கொண்ட டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் வரும். மேலும், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் ஸ்டாண்டர்ட் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்