- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும்
- புதிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனைப் பெறும்
டாடா மோட்டார்ஸ் இந்திய மார்க்கெட்க்கான இரண்டு புதிய கார்ஸை வைத்திருகிறது, அவற்றில் ஒன்று நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட். இந்த நேரத்தில், எஸ்யுவி நாட்டில் விரிவான டெஸ்டிங்கில் ஸ்பை ஷாட்ஸ் பார்க்கப்பட்டது. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி 2020 இல் மீண்டும் ஒரு ஃபேஸ்லிஃப்டைப் பெற்றது, இப்போது உற்பத்தியாளர் நெக்ஸானின் புதிய மறு செய்கையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
அப்டேடட் டாடா நெக்ஸான் டிசைன் மற்றும் எக்ஸ்டீரியர்
டிசைனைப் பொறுத்தவரை, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பகுதியானது, ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட டாடா கர்வ் கான்செப்ட் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ், போன்னெட்டின் குறுக்கே இயங்கும் எல்இடி பார், ஒரு புதிய அலோய் வீல்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்பர். புதிய அலோய் வீல்ஸைத் தவிர, எஸ்யுவியின் விவரம் ஏற்கனவே இருக்கும் மாடலைப் போல் உள்ளது. மறுபுறம், பின்பக்கதில் புதிய எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் டெயில்கேட்டில் இணைக்கும் பார்ரைப் பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் இன்டீரியர்
இன்டீரியரில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் கேபின் புதிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மவுண்டட் கண்ட்ரோலுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய கியர் லெவல் மற்றும் அதிநவீன அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கூடுதலாக, இந்த எஸ்யுவி புதிய ஏர்கான் பேனலுடன் வரும், இது டோகல் சுவிட்சஸ்க்கு மேலேயும் கீழேயும் டச் கண்ட்ரோலின் தொகுப்பை வழங்குகிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஒரு புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வாகன உற்பத்தியாளரால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மோட்டார் 123bhp மற்றும் 225Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடீ யூனிட்டுடன் இணைக்கப்படலாம்.
2023 டாடா நெக்ஸான் லான்ச் தேதி மற்றும் போட்டியாளர்கள்
2023 டாடா நெக்ஸான் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிமுகத்தின் போது, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யுவி மஹிந்திரா XUV300, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, சிட்ரோன் C3, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்