- நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வேவேறு இடத்தில் ஸ்பை டெஸ்டிங்கில் காணப்பட்டது
- இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் மாற்றங்களுடன் வரலாம்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் லான்ச்
அடுத்த இரண்டு மாதங்களில் டாடா தனது நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் லான்ச் செயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி டாடா தனது புதிய கார்ஸான பஞ்ச் இவி,நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட்,ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்,சஃபாரி ஃபேஸ்லிஃப்ட், கர்வ் இவி இந்த வருட இறுதிக்குள் வெளியீட அதில் வேலை செய்து வருகிறது.
நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் எக்ஸ்டீரியர்
முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் டிசைன்யில் நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் லான்ச் செய்யப்படலாம், இதில் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் புதிய பம்பர், புதிய அலோய் வீல்ஸ், புதிய ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப்ஸ், டூ பீஸ் எல்இடி டெயில்லைட்ஸ் போன்ற ஃபீச்சர்ஸ் இதில் காணப்படலாம்.
நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் இன்டீரியர்
இன்டீரியரில் புதிய பர்ப்பல் அப்ஹோல்ஸ்டரி சீட்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய கியர் லெவர், மல்டி ஃபங்ஷன் கொண்ட டூ ஸ்போக் ஸ்டியரிங் வீல், புதிய ஏசி கண்ட்ரோல் பேன்ல், 360-டிகிரி கேமரா, 10.25 டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்களுடன் இது வரலாம்
2023 டாடா நெக்ஸான் இன்ஜின் விவரங்கள்
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸிலும் வழங்கப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் டாடா தனது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷனில் காட்சிக்குவைக்கபட்டுருந்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்