- மேலும் விவரங்கள் இன்று வெளியிடப்படும்
- புதிய இண்டிகோ வண்ணத்தைப் பெறலாம்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவியை கார் தயாரிப்பாளர் இன்று வெளியிடுகிறார். இது நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஏற்கனவே இருக்கும் வெர்ஷனிலிருந்து இன்ஜின் விருப்பங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.
டீஸரில் காணப்படுவது போல், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்ஸைப் பெறும். மேலும், மாடல் புதிய இண்டிகோ வெளிப்புற வண்ண விருப்பத்தைப் பெறும். மாற்றங்களைப் பொறுத்தவரை, புதிய நெக்ஸான் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதுப்பிக்கப்பட்ட அலோய் வீல்ஸ், இன்டெக்ரேட்டட் ரியர் வைப்பர் கொண்ட புதிய ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் இணைக்கும் லைட் பாரைப் பெறும்.
கேபினுக்குள், அப்டேடட் நெக்ஸான் புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் அமைப்பைப் பெறும். இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய புதிய ட்வின்-ஸ்போக் மல்டிஃபங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல், புதிய யுஐஉடன் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி-டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், புதிய கியர் லெவர் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டிருக்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, இன்ஜின்ஸ் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படும். மேலும், அப்டேடட் நெக்ஸானின் பெட்ரோல் வெர்ஷனில் டிசிடீ கியர்பாக்ஸ் அறிமுகப்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்