- செப்டம்பர் மாதத்தில் லான்ச் செய்யபடலாம்
- புதிய இன்டீரியர் உடன் பெறலாம்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு இந்திய கார் தயாரிப்பாளரின் மிக முக்கியமான காராக இருக்கும். இந்த மாடல் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம், அதற்கு முன் இந்த அப்டேடட் எஸ்யுவி ரெட் நிறத்தில் காணப்பட்டது.
2023 நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறங்களில் முற்றிலும் புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ் கொண்ட புதிய ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப்ஸ், புதிய அலோய் வீல்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனாவுடன் கூடிய நீளமான ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் லைட் பார்ஸை இணைக்கும் புதிய எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முந்தைய ஸ்பை ஷாட்ஸில் இண்டிகோ நிறத்தில் நெக்ஸானைக் காட்டியது. ஆனால் இது ப்ரைட் ரெட் நிறத்தில் காணப்படுகிறது, இது தற்போதைய எடிஷனின் ஃப்ளேம்ரெட் நிறத்தின் அப்டேடட் வெர்ஷனாக இருக்கலாம்.
புதிய நெக்ஸானின் உட்புறத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறங்கள், புதிய யுஐ கொண்ட ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச் எச்விஏசிகண்ட்ரோல்ஸ் மற்றும் இல்லுமினேட்டட் லோகோவுடன் டூயல்-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. வரவிருக்கும் நெக்ஸான் எஸ்யுவியின் சென்டர் கன்சோலில் புதிய கியர் செலக்டர் லெவர் இருக்கும்.
2023 நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் விவரங்கள்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் முன்பு இருந்த அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸால் இயக்கப்படும். சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிடுடன் இதில் சேர்க்கப்படும். மேலும், டாடாவில் பெட்ரோல் இன்ஜினுடன் டிசிடீ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
அறிமுகத்திற்குப் பிறகு, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 மற்றும் மற்ற சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவிஸ்க்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்