14 செப்டம்பர், 2023 அன்று இந்தியாவில், டாடா மோட்டார்ஸ் தனது லேட்டஸ்ட் மாடலான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவியை லான்ச் செய்தது. இந்த ஃபைவ்-சீட்டர் எஸ்யுவியின் விலை ரூ. 8.10 லட்சத்தில் ஆரம்பமாகி ரூ. 13 லட்சம் வரை டாப்-வேரியண்ட்க்கு செல்லும் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்). புதுப்பித்தலுடன், உற்பத்தியாளர் இன்ஜினை மாற்றவில்லை, ஆனால் இரண்டு புதிய கியர்பாக்ஸ் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் விருப்பங்களைச் இதில் சேர்த்துள்ளார். இந்தக் கட்டுரையில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் ஃபியூல் எஃபிஷியன்சியை அதன் நெருங்கிய போட்டியாளர்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் கியா சோனெட் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளோம்.
நியூ டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
2023 டாடா நெக்ஸான் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கின்றன- 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். முந்தையது 118bhp மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஃபைவ்- ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்- ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்- ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இதற்கிடையில், டீசல் ஆனது 113bhp மற்றும் 260Nm டோர்க் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய நெக்ஸானின் இன்ஜின் வாரியான ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட மைலேஜ் விவரங்கள் பின்வருபவை.
இன்ஜின் | கியர்பாக்ஸ் | ஃபியூல் எஃபிஷியன்சி |
1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் | ஃபைவ்/சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் | லிட்டருக்கு 17.44 கி.மீ |
சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ | லிட்டருக்கு 17.18 கி.மீ | |
செவன்-ஸ்பீட் டிசிடீ | லிட்டருக்கு 17.01 கி.மீ | |
1.5-லிட்டர் டீசல் | சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் | லிட்டருக்கு 23.23 கி.மீ |
சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ | லிட்டருக்கு 24.08 கி.மீ |
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
பட்டியலில் அடுத்த இடம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகும். இந்த எஸ்யுவி 103bhp மற்றும் 138Nm டோர்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது, பிந்தையது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வருகிறது, எனவே மேனுவல் வேரியண்ட்ஸுடன் ஒப்பிடும்போது சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
கியர்பாக்ஸ் | ஃபியூல் எஃபிஷியன்சி |
மேனுவல் | லிட்டருக்கு 17.38 கி.மீ |
ஆட்டோமேட்டிக் | லிட்டருக்கு 19.80 கி.மீ |
கியா சோனெட்
தென் கொரிய வாகன உற்பத்தியாளர், கியா, அதன் சோனெட்டை 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் வழங்குகிறது. இது பெட்ரோலில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் வழங்கப்படுகின்றன.மறுபுறம் டீசல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் உடன் இருக்கலாம். இந்த எஸ்யுவியின் இன்ஜின் வாரியான ஃபியூல் எஃபிஷியன்சி பின்வருபவை:
இன்ஜின் | டிரான்ஸ்மிஷன் | ஃபியூல் எஃபிஷியன்சி |
1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் | ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் | லிட்டருக்கு 18.4 கி.மீ |
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் | சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ | லிட்டருக்கு 18.2 கி.மீ |
செவன்-ஸ்பீட் டிசிடீ | லிட்டருக்கு 18.3 கி.மீ | |
1.5-லிட்டர் டீசல் | சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் | லிட்டருக்கு 24.1 கி.மீ |
சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் | லிட்டருக்கு 19 கி.மீ |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்