- நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படும்
- இதன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை கடந்த வாரம் வெளியிட்டது, இது இம்மாதம் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று முதல் இந்த புதுப்பிக்கப்பட்ட மாடஸ்கான முன்பதிவுகளை பிராண்ட் திறந்துள்ளது. வாருங்கள் இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் இன்டீரியர் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
நியூ இன்டீரியர் தீம்
2023 நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்ஸிலும் ஃபுல்லி பிளாக் இன்டீரியர் தீம்மையும் பெறுகின்றன, அதே சமயம் நீங்கள் டாப் மாடலான ஃபியர்லெஸ் ப்ளஸ் S வாங்க விரும்பினால் அதில் பர்பிள் தீம்மில் கிடைக்கும். இது தவிர, வாடிக்கையாளர்கள் ஓஷன் ப்ளூ எக்ஸ்டீரியர் ஃபினிஷ் கொண்ட டோர் பேட்ஸைப் பெறுகிறார்கள், மீதமுள்ள வெர்ஷனில் ஒயிட் டோர் பேட்ஸைப் பெறுகிறார்கள்.
பெரிய டச்ஸ்கிரீன்
புதிய நெக்ஸானில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏசிக்கான டச் கண்ட்ரோல்ஸ் மற்றும் ஸ்டீயரிங் வீலில் இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் பிளாஸ்டிக் இன்சர்ட்ஸ்ஸை பெறுகிறது.
360 டிகிரி கேமரா
முதல் முறையாக, நெக்ஸான் 360 டிகிரி கேமராவைப் பெறுகிறது. பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரோன்க்ஸ் பிறகு இந்த செக்மெண்ட்டில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கார் நெக்ஸான் ஆகும்.
வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ்
ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானில் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸின் புதிய ஃபீச்சர்ஸ்ஸை பிராண்ட் வழங்குகிறது. கூடவே இதில் பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் சப்வூஃப்ர்ஸ் கொண்ட ஜெபிஎல்யின் எட்டு-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் இரண்டு அம்சங்களும் உள்ளன.
ஹைட் அட்ஜஸ்ட்டெபல் ஃப்ரண்ட் சீட்ஸ்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் டிரைவருக்கும் மற்றும் முன்பக்க பயணிகளுக்கும் ஹைட் அட்ஜஸ்ட்டெபல் சீட்ஸ் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்