- இந்தியாவில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும்
- iஇன்டீரியரில் ஒரு புதிய டிசைன்னைப் பெறும்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் லான்ச் டைம்லைன்
டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 2023 நெக்ஸானை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த மாடல் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, அப்டேடட் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் இன்டீரியர் இணையத்தில் வெளிவந்துள்ளன.
2023 டாடா நெக்ஸான் இன்டீரியர் லீக்ட் படங்கள்
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் டூயல்-டோன் இன்டீரியர் தீம்ஸை கொண்டிருக்கும். முற்றிலும் புதிய டாஷ்போர்டில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருக்கும். பின்னர், புதிய டூ-ஸ்போக், ஃப்ளாட்-பாட்டம், மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் கர்வ் கான்செப்ட்டில் இருந்து வாங்கப்பட்டது. சென்டர் கன்சோலும் அப்டேட் செய்துள்ளது, மேலும் இப்போது புதிய எச்விஏசி கன்ட்ரோல் பேனல் மற்றும் கியர் லெவரைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் ஏசி வென்ட்ஸின் டிசைன் மற்றும் டிரைவ் மோட்ஸ்க்கான ரோட்டரி கியர் நாப் ஆகியவை இப்போது இருக்கும் நெக்ஸான் வெர்ஷனிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன மற்றும் சீட்ஸும் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் எக்ஸ்டீரியர் டிசைன்
சமீபத்திய ஸ்பை ஷாட்ஸில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் எக்ஸ்டீரியர் டிசைனின் முக்கிய விவரங்களை வெளிப்படுத்தின. புதிய கிரில், புதிய ஸ்ப்ளிட்ஹெட்லேம்ப் செட்-அப், திருத்தப்பட்ட ஏர் டேம், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் பூட் லிடில் எல்இடி லைட் பார் ஆகியவை கிடைக்கும்.
வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் டெக்னிக்கல் விவரக்குறிப்புகளை இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தற்போது இருக்கும் நெக்ஸான் இலிருந்து எடுத்துச் செல்லப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்னும், ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட அதிக வெளியீட்டைக் கொண்ட புதிய யூனிட்டுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்