- வரும் செப்டம்பர் மாதம் லான்ச் ஆகும்
- 360 டிகிரி கேமரா, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய இன்ஃபோடெயின்மென் ஆகியவற்றை பெறலாம்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும், இப்போது அதன் வேரியண்ட் பெயர்கள் மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது அதன் இன்டீரியர் படங்களும் இணையத்தில் வந்துள்ளன. இது அதன் லேஅவுட், புதிய ஃபீச்சர்ஸ் மற்றும் நெக்ஸானின் புதிய கேபின் தீம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் இன்டீரியர் தீமில் என்ன இருக்கும்?
ஸ்பை ஷாட்ஸின்படி, நெக்ஸானின் கேபினுக்கு பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டு, டோர் பேட்ஸ் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றில் கான்ட்ராஸ்ட் இண்டிகோ இன்சர்ட்ஸ் உள்ளன. எந்த டாடா மாடலிலும் இல்லாத இந்த வண்ணம் முதல் முறையாக வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்குச் தெரிவிக்கிறோம்.
புதிய நெக்ஸானில் என்ன ஃபீச்சர்ஸ் கிடைக்கும்?
அப்டேடட் நெக்ஸான், பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் மற்றும் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பிராண்டின் இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் உள்ளிட்ட புதிய ஃபீச்சர்ஸுடன் வரும்.
இதன் ஏர்கான் பேனல் புதியதாகவும், கர்வ் கான்செப்ட்டைப் போலவே இருக்கும். அதன் கியர் லெவரும் மறுவடிவமைக்கப்படும் மற்றும் டிரைவ் மோட்ஸைத் தேர்ந்தெடுக்க ரோட்டரி டயலைப் பெறுகின்றன.
புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் BS6 ஃபேஸ் 2 கம்ப்ளைன்ட் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்படலாம். இருப்பினும், 2023நெக்ஸானின் பெட்ரோல் இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் யாருடன் போட்டியிடும்?
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் மற்றும் இது புதிய ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், நிசான் மேக்னைட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300 மற்றும் ரெனோ கைகர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
சிறு பட ஆதாரம்: அப்பீட் உமங்