- செப்டம்பர் 14 அன்று தொடங்கப்படும்
- பேடில் ஷிஃப்டர்ஸுடன் புதிய செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸைப் பெறுகிறது
டாடா மோட்டார்ஸ் இந்தியா, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை செப்டம்பர் 1, 2023 அன்று நாட்டில் வெளியிட்டது. இந்த எஸ்யுவிக்கான முன்பதிவு செப்டம்பர் 14, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் என்று வாகனத் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
2023 டாடா நெக்ஸான் புதிய பெயரிடலுடன் 11 வேரியண்ட்ஸில் வழங்கப்படும். இதில் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ (S), ப்யூர்+, ப்யூர்+ (S), கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+, கிரியேட்டிவ்+ (எஸ்), ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ (S) ஆகியவை அடங்கும். இந்த புதிய பெயரிடல் தவிர, டாடா எஸ்யுவியின் சமீபத்திய மறு செய்கைக்காக புதிய எக்ஸ்டீரியர் நிறங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஃபியர்லெஸ் பர்பிள், கிரியேட்டிவ் ஓஷன், ப்ரிஸ்டின் ஒயிட், ப்யூர் க்ரே, டேடோனா க்ரே மற்றும் ஃப்ளேம் ரெட் ஆகியவை அடங்கும்.
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் இன்டீரியர் சிறப்பம்சங்களில், 10.25-இன்ச் ஃபுல்லி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொண்ட புதிய 10.25-இன்ச் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், லேண்ட் ரோவரால் ஈர்க்கப்பட்ட கியர் லெவர், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவை அடங்கும்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட்டுடன் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மாற்றங்கள், என்னவென்றால், டர்போ-பெட்ரோலில் புதிய செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸை பேடில் ஷிஃப்டர்ஸுடன் வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்