- பாரத் என்கேபில் சோதனை செய்யப்படும் டாடாவின் நான்காவது மாடல்
- பாரத் என்கேப் பாதுகாப்பு மதிப்பீட்டில் பஞ்ச் இவி ஆனது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது
டாடா நெக்ஸான் இவி பாரத் என்கேப் மூலம் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது மற்றும் இந்த மாடல் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றது. ஹேரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் இவி’கள் பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் சோதனை செய்யப்பட்டன, இது டாடாவின் நான்காவது மாடலாக நெக்ஸான் இவி இணைந்துள்ளது.
அடல்ட் சேஃப்டியில், நெக்ஸான் இவி 32 புள்ளிகளில் 29.86 புள்ளிகளைப் பெற்றது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த எலக்ட்ரிக் எஸ்யுவியின் உள்ளே 6 ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஃப்ரண்ட் சீட்டில் லோட் லிமிட்டர்களுடன் ப்ரீ-டென்ஷனர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும் சைல்ட் சேஃப்டியில் நெக்ஸான் இவி 49 புள்ளிகளில் 44.95 புள்ளிகளைப் பெற்றது. நெக்ஸானின் ஃப்ரண்ட் சீட்ஸில் சைல்ட் சீட் மற்றும் ஃப்ரண்ட் பயணிகளுக்கான மேனுவல் ஏர்பேக் கட்-ஆஃப் சுவிட்ச் போன்ற பாதுகாப்பு பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எல்லா மாடல்களையும் போலவே, நெக்ஸான் மாடலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) அம்சத்தை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்’ ஐசக் தீபன்