- இந்தியாவில் நெக்ஸான் இவி’யின் விலை செப்டம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்
- புக்கிங் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்கும்
2024 நெக்ஸான் இவி லான்ச் டைம்லைன் மற்றும் புக்கிங் விவரங்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி லான்ச் செய்ய திட்டமிட்டுள்ளது. கார் தயாரிப்பாளர் ஃபேஸ்லிஃப்டட் எலக்ட்ரிக் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர் டிசைன்
வெளிப்புறத்தில், டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் பெரிதும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பைப் பெறுகிறது. இதில் இருபுறமும் டிஆர்எல்ஸுடன் இணைக்கப்பட்ட எல்இடி லைட் பார், வெர்டிகல்லி அடுக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், Y வடிவ எல்இடி டெயில்லைட்ஸ், எல்இடி லைட் பார் மற்றும் பூட்லிடில் 'நெக்ஸான்.இவி' எழுத்துகள், சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா. புதிய ரூஃப் ரெயில்ஸ், ஏர் டேம் மற்றும் அலோய் வீல்ஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் பிரிஸ்டின் ஒயிட், டேடோனா க்ரே, ஃபிளேம் ரெட், ஃபியர்லெஸ் பர்பிள், கிரியேட்டிவ் ஓஷன் மற்றும் இன்டென்சி-டீல் என நான்கு வண்ணங்களில் நெக்ஸான் இவியை தேர்வு செய்யலாம்
நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர் மற்றும் சேஃப்டி அம்சங்கள்
இதில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆர்கேட் இவி, ஏசிக்கான டச் கண்ட்ரோல், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் மற்றும் ஹைட் அட்ஜஸ்ட்டெபல் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா
முன் மற்றும் பின்புறம் 45W டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ் , 320W ஒன்பது-ஸ்பீக்கர் கொண்ட ஜெபிஎல் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், கூல்ட க்லோவ் பாக்ஸ், ஓடீஏ அப்டேட்ஸ், டிரைவ் மோட்ஸ் போன்ற அம்சங்களைப் பெறும்.
பாதுகாப்பை பொறுத்தவரை இதில் ஃப்ரண்ட் பார்க்கிங் அசிஸ்ட், ப்ளைன்ட் வியூ மானிட்டர், அனைத்து பயணிகளுக்கும் சீட்-பெல்ட் ரிமைன்டர், ஆறு ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், இஎஸ்பீ, அல்-டிஸ்க் ப்ரேக்ஸ், ஐ-டீபீஎம்எஸ், ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷனுடன் கூடிய இபீபி மற்றும் ஹில் அஸ்சென்ட் மற்றும் டிசென்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இது பொருத்தப்பட்டுள்ளது.
புதிய டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் பேட்டரி பேக் மற்றும் விவரக்குறிப்புகள்
2024 டாடா நெக்ஸான் இவி தற்போது 30.2 kWh மற்றும் 40.5kWh பேட்டரி பேக்ஸுடன் மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷனில் வழங்கப்படுகிறது. மீடியம் ரேஞ்ச் வெர்ஷன் 325 கி.மீ உரிமைகோரப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது, அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் வெர்ஷன் ஒரு முழு சார்ஜில் 465 கி.மீ வரை உரிமைகோரப்பட்டுள்ளது. 143bhp மற்றும் 215Nm டோர்க்கை கொண்ட இந்த மாடல், இப்போது 8.9 வினாடிகளில் 150kmph வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் 3.3kW வெஹிகல்-டூ-லோட் மற்றும் வெஹிகல்-டூ-வெஹிகல் போன்ற அம்சங்களையும் கொண்டது.
ஸ்டாண்டர்ட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர் ஆகியவை மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷனை 10.5 மணிநேரம் மற்றும் 15 மணிநேரங்களில் 10-100 சதவிதத்தில் சார்ஜ் செய்ய உதவுகிறது, அதே நேரத்தில் 7.2kW சார்ஜர் அதே அளவு 4.3 மணிநேரம் மற்றும் ஆறு மணிநேரங்ளில் இதை சார்ஜ் செய்ய உதவுகிறது. அதே ஒரு டிசி ஃபாஸ்ட் சார்ஜர் இரண்டு வெர்ஷனையும் 56 நிமிடங்களில் 10-100 சதவீதம் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்