- 14 செப்டம்பர் அன்று நெக்ஸான் இவியின் விலை வெளி ஆகும்
- இரண்டு பேட்டரி பேக்ஸ் உடன் வழங்கபடும்
டாடா மோட்டார்ஸ் இம்மாதம் 7ஆம் தேதி ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவியை வெளியிட்டது, இதற்கான முன்பதிவுகள் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே டீலர்ஸிடம் வரத் தொடங்கியுள்ளது.
2023 டாடா நெக்ஸான் இவி வேரியண்ட்ஸ் மற்றும் வண்ண விருபங்கள்
படத்தில் காண்பது போல, நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட், எம்பவர்ட் ஆக்சைடு ஷேடில் உள்ளது, இது ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கிரியேட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+, ஃபியர்லெஸ்+ S, எம்பவர்ட் மற்றும் எம்பவர்ட்+ என ஆறு வேரியண்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம்.
ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவி ஃபீச்சர்ஸ்
ஃபீச்சர்ஸ் பற்றி பேசுகையில், 2023 நெக்ஸான் இவி ஆனது எல்இடி லைட்டிங், ஃப்ரண்ட் மற்றும் ரியர் எல்இடி லைட் பார்ஸ், புதிய அலோய் வீல்ஸ், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேடெட் மற்றும் ஹைட் அட்ஜஸ்ட்டெபல் ஃப்ரண்ட் சீட், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டச் அடிப்படையிலான ஏசி கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறும்.
ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவி பேட்டரி மற்றும் ரேஞ்ச் விவரங்கள்
புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 30kWh மற்றும் 40.5kWh என இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் பெறலாம், இது 25 கி.மீ மற்றும் 465 கி.மீ ரேஞ்சை அளிக்கிறது. இந்த வெர்ஷன் மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என அழைக்கப்படுகின்றன, மேலும் இது 27bhp மற்றும் 143bhp இல், அதே 215Nm டோர்க் திறனையும் உருவாக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்