- இதில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்ஸ் உள்ளன
- வி2வி சார்ஜிங் வசதி கொண்ட இந்த பிரிவில் முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும்
டாடா மோட்டார்ஸ் தனது புதிய எலக்ட்ரிக் நெக்ஸானை செப்டம்பர் 14, 2023 அன்று விலையோடு அறிமுகப்படுத்தியது. இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி மிட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வெர்ஷன்ஸில் கிடைக்கிறது. இந்த வெர்ஷன் முறையே 325 கி.மீ மற்றும் 465 கி.மீ ரேஞ்சை வழங்குகின்றன. இந்த கட்டுரையில், டாப்-10 நகரங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் இவியின் ஆன்-ரோடு விலைகளை இதில் உங்களுக்குக் கூறுகிறோம்.
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் ஆன்-ரோடு விலைகள்
நகரம் | பேஸ் வேரியண்ட் (கிரியேட்டிவ்+ மிட் ரேஞ்ச்) | டாப் வேரியண்ட் (எம்பவர்ட்+ லாங் ரேஞ்ச்) |
மும்பை | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.14 லட்சம் |
சென்னை | ரூ. 15.60 லட்சம் | ரூ. 21.15 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.13 லட்சம் |
மதுரை | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.13 லட்சம் |
பெங்களூரு | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.15 லட்சம் |
திருப்பூர் | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.13 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 15.58 லட்சம் | ரூ. 21.14 லட்சம் |
கொச்சி | ரூ. 16.16 லட்சம் | ரூ. 21.12 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 15.59 லட்சம் | ரூ. 21.13 லட்சம் |
டெல்லி | ரூ. 15.62 லட்சம் | ரூ. 21.18 லட்சம் |
2023 நெக்ஸான் இவி இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
டாடா நெக்ஸான் இவியில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் டிரைவருக்கு 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. கூடுதலாக, இது வாகனத்திலிருந்து வாகனம் (வி2வி) சார்ஜிங், வாகனத்திலிருந்து லோட்க்கு (வி2எல்), ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது.