- இதன் முன்பதிவு ரூ.21,000க்கு தொடங்கியுள்ளது
- இது 30.2kWh மற்றும் 40.5kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் இன்று நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் ஐசிஇ மற்றும் இவி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நெக்ஸான்.இவி யின் விலையை ரூ. 14.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிவித்தது. இது ஆறு வேரியண்ட்ஸ் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 9, 2023 அன்று கார் உற்பத்தியாளர் இந்த எஸ்யுவியின் முன்பதிவுகளை ரூ.21,000க்கு தொடங்கினார். அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்ஸ் அல்லது ஆன்லைன் போர்ட்டலில் வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்யலாம்.
நெக்ஸான் இவியின் எக்ஸ்டீரியர்
ஃப்ரண்ட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டிஆர்எல்ஸில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி லைட் பார்ஸ், சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், ஷார்க் ஃபின் ஆண்டெனா, டெயில் கேட்டில் ‘நெக்ஸான்.இவி’ பேட்ஜ் மற்றும் X காரணி கொண்ட புதிய டெயில் லைட்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர புதிய அலோய் வீல்ஸ் மற்றும் ரூஃப் ரெயில்ஸும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
டாடா நெக்ஸான்.இவி இன்டீரியர்
உட்புறத்தைப் பற்றி பேசுகையில், வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் மல்டிஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜேபிஎல்லின் ஒன்பது ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவையும் இதில் அடங்கும்.
நெக்ஸான்.இவி ஆனது ஃபுல் டிஸ்க் ப்ரேக்ஸ், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ஐ-டீபீஎம்எஸ் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டுள்ளது. நெக்ஸான்.இவி’யில் எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக், ஆட்டோ ஹோல்ட், ஓடீஏ அப்டேட்ஸ் மற்றும் மல்டி- ரீஜியன் மோட்ஸ் உள்ளன, இவை ஐசிஇ மாடல்ஸில் காணப்படவில்லை.
நெக்ஸான்.இவி பேட்டரி மற்றும் ரேஞ்ச் விவரங்கள்
டாடா நெக்ஸான்.இவி ஃபேஸ்லிஃப்ட் ப்ரைம் மற்றும் மேக்ஸ் வேரியண்ட்ஸில் 30.2kWh மற்றும் 40.5kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்ஸில் வழங்கப்படுகிறது. 40.5kWh பேட்டரி பேக் 465 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது, அதே நேரத்தில் 30kWh பேட்டரி பேக் 325 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
சார்ஜ் செய்வதற்கு, நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் 7.2kWh ஃபாஸ்ட் சார்ஜருடன் வழங்கப்படும், இதன் உதவியுடன் இந்த காரை வெறும் 56 நிமிடங்களில் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா நெக்ஸான்.இவி வேரியண்ட்ஸ் மற்றும் விலை
வேரியண்ட்ஸ் வாரியாக நெக்ஸான்.இவி ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
கிரியேட்டிவ்+ மீடியம் ரேஞ்ச் | ரூ. 14.74 லட்சம் |
ஃபியர்லெஸ் மீடியம் ரேஞ்ச் | ரூ. 16.19 லட்சம் |
ஃபியர்லெஸ்+ மீடியம் ரேஞ்ச் | ரூ. 16.69 லட்சம் |
ஃபியர்லெஸ்+ எஸ் மீடியம் ரேஞ்ச் | ரூ. 17.19 லட்சம் |
எம்பவர்ட் மீடியம் ரேஞ்ச் | ரூ. 17.84 லட்சம் |
ஃபியர்லெஸ் லாங் ரேஞ்ச் | ரூ. 18.19 லட்சம் |
ஃபியர்லெஸ்+ லாங் ரேஞ்ச் | ரூ. 18.69 லட்சம் |
ஃபியர்லெஸ்+ எஸ் லாங் ரேஞ்ச் | ரூ. 19.19 லட்சம் |
எம்பவர்ட்+ லாங் ரேஞ்ச் | ரூ. 19.94 லட்சம் |