- இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் கிடைக்கும்
- 465 கி.மீ வரை கோரப்பட்ட ரேஞ்சை பெறுகிறது
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் எலக்ட்ரிக் வெர்ஷனை 7 செப்டம்பர் 2023 அன்று இந்தியாவில் வெளியிட்டது. இப்போது, உற்பத்தியாளர் எஸ்யுவியின் முன்பதிவுகளை ரூ. 21,000 இல் தொடங்கொயுள்ளார், மேலும் வடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் அல்லது பிராண்டின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் காரை முன்பதிவு செய்யலாம்.
வேரியண்ட்ஸ் மற்றும் வண்ண விருபங்கள்
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது - கிரியேட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் +, ஃபியர்லெஸ் + S, எம்பவர்ட், மற்றும் எம்பவர்ட் +. இதில் ஃபியர்லெஸ் பர்பிள், கிரியேட்டிவ் ஓஷன், டேடோனா க்ரே, இன்டென்சி-டீல், ப்ரிஸ்டின் ஒயிட், ஃப்ளேம் ரெட் மற்றும் எம்பவர்ட் ஆக்சைடு ஆகிய ஏழு எக்ஸ்டீரியர் வண்ணங்க்ள் அடங்கும்.
நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் ஃபீச்சர்ஸ்
அம்சங்களைப் பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரீஜென் செயல்பாட்டிற்கான பேடில் ஷிஃப்டர்ஸ், இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது. கூடுதலாக, இது கூல்டு க்ளவ் பாக்ஸ், 360 டிகிரி கேமரா, ஒன்பது ஜேபிஎல் ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது.
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் பேட்டரி பேக் விவரங்கள்
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷன் என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் இருக்கலாம். மீடியம் ரேஞ்சில் 30kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, லாங் ரேஞ்ச் 325 கி.மீமற்றும் 465 கி.மீஎன வரம்பில் 40.5kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இந்த எஸ்யுவி 0-100 கி.மீ ஸ்பீட்டை வெறும் 8.9 வினாடிகளில் எட்டும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 150 கி.மீஸ்பீட்டை எட்ட முடியும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்