- 2023 ஆண்டு புதுப்பிப்புகள் காஸ்மெட்டிக் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன
- புதிய எக்ஸ்டீரியர் வண்ணங்களைப் பெறுகிறது
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானை எக்ஸ்டீரியரிலும் இன்டீரியரிலும் மாற்றங்களுடன் வெளியிட்டது. வேரியண்ட் வாரியான விலைகள் செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படும். இப்போது, இந்த படத்தொகுப்பின் மூலம் எக்ஸ்டீரியர் டிசைன் மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
புதிய டாடா நெக்ஸான் எக்ஸ்டீரியர் படங்கள்
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் கர்வ் கான்செப்டை காட்சிப்படுத்தியது. புதிய நெக்ஸானின் வடிவமைப்பு இதை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பெரும்பாலான கூறுகளை பிரதிபலிக்கிறது.
அதன் சமீபத்திய மறு செய்கையில், நெக்ஸான் ஸ்லிம் கிரில், ஸ்ப்ளிட்-ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் மறு-செதுக்கப்பட்ட பம்பர் ஆகியவற்றைக் கொண்ட புதிய ஃப்ரண்ட் டிசைன்னைப் பெறுகிறது.
இது புதிய L-வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்ஸை பெறுகிறது. மறுபுறம், மெயின் ஹெட்லைட் க்ளஸ்டர் இப்போது ஹேரியர் போன்ற முன் பம்பரில் குறைவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய நெக்ஸான் டூயல்-டோன் அலோய் வீல்ஸில் பெறுகிறது.
டாடா மோட்டார்ஸ் நெக்ஸானின் ரியர் வடிவமைப்பையும் புதுப்பித்துள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி ஆனது எல்இடி லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட புதிய எல்இடி டெயில் லைட்ஸைப் பெறுகிறது.
2023 டாடா நெக்ஸான் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 118bhp மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. வாடிக்கையாளர்கள் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்- ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்- ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் பேடில் ஷிஃப்டர்ஸுடன் செவன்-ஸ்பீட் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நான்கு கியர்பாக்ஸ் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். சிக்ஸ்- ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ உடன் வழங்கப்படும் 1.5-லிட்டர் மோட்டாரைத் தக்கவைத்துக்கொள்ளும் டீசல் விருப்பமும் உள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்