- டாப்-எண்ட் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இந்த மாடல் டீசல் ஏடீயை விட விலை அதிகமாக இருக்கும்
டாடா மோட்டார்ஸ் அதன் சிறந்த விற்பனையான கார் நெக்ஸானின் ஐசிஇ வெர்ஷனில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில் பிராண்டால் கர்வ் இவி வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனத்தின் அதிகம் பேசப்படும் மாடல் நெக்ஸான் இந்த நாட்களில் மீண்டும் தலைப்புச் செய்திகளில் உள்ளது. பிராண்டின் ஆன்லைனில் லீக் ஆனா சமீபத்திய படத்தில், நெக்ஸான் டூயல்-கிளட்ச்-ட்ரான்ஸ்மிஷனுடன் (டிசிடீ) வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தி வெளி வருகிறது.
படத்தில் காணப்படுவது போல், டீசல்-ஸ்பெக் டாடா நெக்ஸானை டிசிடீ உடன் தெளிவாகக் காணலாம். இது ஃபியர்லெஸ்+ S வேரியன்ட் ஆகும், இது நெக்ஸானின் டாப்-ஸ்பெக் வெர்ஷனாகும். இதற்குப் பிறகு, நிறுவனம் டூயல் கிளட்ச் டெக்னாலஜி உடன் கூடிய கர்வின் ஐசிஇ வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்தும், இதில் புதிய 1.5 லிட்டர் கிரையோஜெட் டீசல் இன்ஜினும் அடங்கும்.
டிசிஏ தற்போது நெக்ஸானில் கிடைத்தாலும், அது பெட்ரோல் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, டிசிடீ உடன் டீசல் வேரியன்ட்டில் நெக்ஸான் அறிமுகமானது, இந்த வரிசையில் மற்ற விருப்பங்களைத் தேடும் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
தற்போது, நெக்ஸானின் டாப்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் டீசல் மாடல் ரூ. 15.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. அதேசமயம், பெட்ரோல் டிசிடீ வேரியன்ட்டின் விலை ரூ. 14.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இத்தகைய சூழ்நிலையில், நெக்ஸான் டீசல் டிசிஏ இன் விலை ஏடீ வெர்ஷனை விட சுமார் 50,000 ரூபாய் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டாடா கர்வ் அதன் வரம்பில் முதல் மாடல் ஆகும், இதில் டிசிடீ கியர்பாக்ஸ் விருப்பம் டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, நெக்ஸான் இந்த கட்டமைப்பு வழங்கப்படும் முதல் காம்பேக்ட் எஸ்யுவி ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்