- இது ஸ்டாண்டர்ட் வேரியன்ட்டை விட ரூ. 30,000 அதிகமாக இருக்கும்
- தற்போதுள்ள நெக்ஸான் இன்ஜின் ஆப்ஷன் இதில் கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் அதன் சிறந்த விற்பனையாகி வரும் மிட்-சைஸ் எஸ்யுவி நெக்ஸானின் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டாடா நெக்ஸான் செப்டம்பர் 2023 இல் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னைப் பெற்றது இதில் புதிய டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் பல டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், டாடா புதிய நெக்ஸானின் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தவில்லை. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் நிறுவனம் இதைக் காட்சிப்படுத்தியது. இப்போது மாடலின் லான்ச்க்கு முன், அதன் வேரியன்ட் பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளோம்.
வேரியன்ட்ஸ் மற்றும் அம்சங்கள்
நெக்ஸான் டார்க் எடிஷன் 14 வேரியன்ட்ஸில் வழங்கப்படலாம், அதில் 8 பெட்ரோல் மற்றும் 6 டீசல் வேரியன்ட்ஸில் இருக்கலாம், இது அதன் சிறந்த மாடல்களான கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் அடிப்படையிலானதாக இருக்கலாம். இந்த எடிஷன் ஸ்மார்ட் மற்றும் ப்யூர் டிரிமில் கிடைக்காது. அதன் டார்க் எடிஷனில் ஃபுல்லி பிளாக் தீம் அப்டேட்டுடன், பிளாக் ரூஃப் லைனர், பிளாக் டேஷ்போர்டு, பிளாக் டோர் பேனல், பிளாக் அலோய் வீல்கள், நடுவில் பிளாக் டாடா லோகோ மற்றும் பிளாக் ஸ்டீயரிங் வீல் போன்ற அப்டேட்ட அம்சங்களை அதன் கேபினில் காணலாம். மேலும், அதன் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் டார்க் பேட்ஜிங் காணப்படும்.
இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
நெக்ஸான் டார்க் எடிஷன் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின்களைக் கொண்டிருக்கும். இவற்றில் ஒன்று 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் 118bhp மற்றும் 170Nm மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினில் 113bhp மற்றும் 260Nm டோர்க் உற்பத்தி செய்யும் இன்ஜின் ஆகும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
எவ்வளவுக்கு விற்கப்படும்?
டாடா நெக்ஸான் டார்க் எடிஷன் வேரியன்ட்டின் விலை ஸ்டாண்டர்ட் மாடலை விட ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை அதிகமாக இருக்கும். நெக்ஸான் விலை ரூ. 8.15 லட்சத்தில் தொடங்கி ரூ. 15.60 லட்சம் வரை செல்கிறது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்).
போட்டியாளர்
சமீபத்தில் நெக்ஸான் க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஃபைவ் ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கைப் பெற்றது. டாடா நெக்ஸான் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV300, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்