- இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும்
- இது பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வெர்ஷஸில் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் சிஎன்ஜியை பாரத் மொபிலிட்டி ஷோ 2024 இன் போது காட்சிப்படுத்தியது. இப்போது இந்த பிரபலமான காம்பேக்ட் எஸ்யுவியின் சிஎன்ஜி வெர்ஷன் வரும் மாதங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜிக்கு போட்டியாக இருக்கும்.
நெக்ஸான் சிஎன்ஜியில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி வாகனம் இதுவாகும். பெட்ரோல் மோடில், இந்த இன்ஜின் 118bhp பவரையும், 170Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. சிஎன்ஜி மோடில், இது சற்று குறைவான சக்தி மற்றும் டோர்க்கை உருவாக்கும். எனினும் இது தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
மறுபுறம், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி 1.5 லிட்டர் K15C என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஃபேக்டரி ஃபிட்டெட், சிங்கிள் சிலிண்டர் சிஎன்ஜி கிட் உடன் வருகிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 87bhp சக்தியையும் 121Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இருப்பினும், நெக்ஸான் ஆனது ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி அமைப்பைக் கொண்டுள்ளது, இது மிகவும் சிறந்தது மற்றும் அதிக பூட் ஸ்பேஸையும் வழங்குகிறது. இந்த அமைப்பு 60 லிட்டர் கேஸ் மற்றும் 230 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்