- 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும்
- இது இந்தியாவின் முதல் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி எஸ்யுவி ஆகும்
டாடா மோட்டார்ஸ் தற்போது கர்வ் இவி மற்றும் கர்வ் ஐசிஇ ஆகியவற்றை தயாரித்து வருகிறது, இது அடுத்த மாதம் வரவுள்ளது. இதற்குப் பிறகு, டாடா நெக்ஸான் சிஎன்ஜி செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம்.
தற்போது டாடா நெக்ஸான் பெட்ரோல், டீசல் மற்றும் இவி வெர்ஷனில் கிடைக்கிறது. இப்போது சிஎன்ஜி வெர்ஷனிலும் , நெக்ஸான் கூடுதல் விருப்பங்களில் கிடைக்கும்.
மற்ற டாடா கார்களில் உள்ள அதே சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜி நெக்ஸான் சிஎன்ஜியும் கொண்டிருக்கும். ஆனால் இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும், இது 118bhp பவரையும் 170Nm டோர்க்கையும் உருவாக்கும். இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவும் இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வழங்கினால், அதிகமான மக்கள் அதை விரும்புவார்கள்.
அறிமுகத்திற்குப் பிறகு, டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியுடன் போட்டியிடும். இதன் விலை ஸ்டாண்டர்ட் வெர்ஷனை விட ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை அதிகமாக இருக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்