- சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டீ) உடன் மட்டுமே கிடைக்கிறது
- டாடா நெக்ஸான் இப்போது பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் இவி வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
இந்தியாவில் அறிமுகம்
இந்த மாதம் அதாவது அக்டோபர் தொடக்கத்தில், டாடா நெக்ஸான் தனது சிஎன்ஜி வெர்ஷன்னை ரூ. 8.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது த்ரீ-பெடல் இன்ஜின் செட்டப் உடன் பல்வேறு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. நாங்கள் இந்த காரை ஓட்டியுள்ளோம், அதன் மதிப்பாய்வு எங்கள் வெப்சைட்டில் உள்ளது. இதன் ரியல்-வேர்ல்டு மைலேஜையும் டெஸ்ட் செய்தோம். அவற்றின் விவரங்கள் இதோ உங்களுக்காக.
இன்ஜின் விவரங்கள்
டாடா நெக்ஸான் சிஎன்ஜி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த இன்ஜின் ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் 118bhp/170Nm டோர்க்கையும், சிஎன்ஜி வெர்ஷனில் 98bhp/170Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது, அதே சமயம் சிஎன்ஜி அல்லாத இன்ஜினில் செவன்-ஸ்பீட் டிசிடீ உடன் வழங்கப்படுகின்றன. மேலும், டாடாவின் ஆதாரங்கள் சிஎன்ஜி இன்ஜினுக்கான ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளன, ஆனால் இவை எதுவும் இப்போது அதிகாரப்பூர்வமாக இல்லை.
நிஜ உலக மைலேஜ்
ஸ்டாண்டர்ட் பெட்ரோல் வெர்ஷனில், இந்த இன்ஜின் லிட்டருக்கு 17.44 கிமீ மைலேஜ் தரும். அதிகாரப்பூர்வமாக, மைலேஜ் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. இல்லையெனில், நாங்கள் காரை சோதனைக்கு உட்படுத்தினோம். அவற்றின் முடிவுகளும் இதில் உள்ளன. எங்களின் நிஜ உலகச் சோதனையில், சிட்டியில் கிலோவுக்கு 11.65 கிமீ மற்றும் ஹைவேயில் கிலோவுக்கு 17.5 கிமீ மைலேஜை நெக்ஸான் சிஎன்ஜி வழங்கியது. சராசரியாக, சிட்டி மற்றும் ஹைவேயில் கிலோவுக்கு 13 கிமீ மைலேஜை மட்டுமே தருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்