- பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் அறிமுகமாகும்
- நெக்ஸான் சிஎன்ஜியில் 230 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது
டாடா மோட்டார்ஸ் நாளை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் எட்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் நெக்ஸான் சிஎன்ஜி, நெக்ஸான் இவி டார்க் எடிஷன், சஃபாரி டார்க், கர்வ் கான்செப்ட், அல்ட்ரோஸ் ரேசர் கான்செப்ட், ஹேரியர் இவி கான்செப்ட், சஃபாரி மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச் இவி போன்ற மாடல்கள் இதில் அடங்கும்.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி கான்செப்ட்
நெக்ஸான் எஸ்யுவி ஆனது ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கிட் உடன் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும். சிஎன்ஜி சிலிண்டர்கள் 60 லிட்டர் கேஸ் இடத்தையும், அதன் பூட் ஸ்பேஸ் 230 லிட்டராகவும் இருக்கும். இது தவிர, நெக்ஸான் சிஎன்ஜியில் மைக்ரோ ஸ்விட்ச், லீக்கேஜ் ப்ரூஃப் மெட்டீரியல், தெர்மல் இன்சிடென்ட் ப்ரொடெக்க்ஷன், சிங்கிள் அட்வான்ஸ்டு இசியு, சிஎன்ஜி மோடில் டைரக்ட் ஸ்டார்ட், மாடுலர் ஃப்யூவல் ஃபில்டர் மற்றும் லீக் டிடெக்ஷன் ஃபேலியர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
நெக்ஸான் இவி டார்க் எடிஷன்
நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் முதல் முறையாக புதிய டார்க் எடிஷனில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷனில் '#DARK' கையொப்பம் எழுத்துகள், டார்க் எக்ஸ்டீரியர் மற்றும் கீழ் பம்பரில் பியானோ பிளாக் நிறத்தில் இருக்கும். மேலும், இதில் 16 இன்ச் பிளாக் அலோய் வீல்கள் இருக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், டார்க் எடிஷனில் எல்இடிகளுடன் கூடிய ஸ்மார்ட் டிஜிட்டல் லைட்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் நீளமான எல்இடி ஸ்ட்ரிப், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி ஃபாக் லைட்ஸ் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்-ஃபேக்டர் ஆகியவை இருக்கும்.
டாடா நெக்ஸான் ஐ-சிஎன்ஜி பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லான்ச் ஆகும், ஏனெனில் இது சிஎன்ஜி உடன் வரும் முதல் டர்போசார்ஜ்ட காம்பாக்ட் எஸ்யுவி ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்