- நெக்ஸான் அதிக இன்ஜின் விருப்பங்களைக் கொண்ட இந்தியாவின் காராகும்
- முதல் முறையாக, டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி பவரை இந்தியா பெறவுள்ளது
டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான எஸ்யுவி நெக்ஸானின் சிஎன்ஜி வெர்ஷனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய நெக்ஸான் சிஎன்ஜி, 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது, பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். மேலும், இதில் ட்வின் சிஎன்ஜி சிலிண்டர் பயன்படுத்தப்படும் டாடாவின் மூன்றாவது காராக இது இருக்கும்.
நெக்ஸான் சிஎன்ஜியின் டிசைனில், ரியரில் உள்ள புதிய ஐ-சிஎன்ஜி பேட்ஜைத் தவிர, பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்ஸ்ஸை போலவே இருக்கும். இது தவிர, இது ஒரு மேம்பட்ட இசியு, ஆட்டோ ஃபியூல் சுவிட்ச், சிஎன்ஜி மோடில் டைரக்ட் ஸ்டார்ட் ஃபங்ஷன் மற்றும் பெரிய 60 லிட்டர் சிஎன்ஜி டேங்க் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இன்டீரியரில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது, ஆனால் நெக்ஸான் சிஎன்ஜியில் எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் பெரிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் போன்ற அம்சங்கள் இருக்கலாம்.
நெக்ஸான் சிஎன்ஜி இன்ஜினின் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், பெட்ரோல் மோடில் அதன் 1.2-லிட்டர் டர்போ இன்ஜின் 118bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. கூடுதலாக, இது செக்மெண்ட்-ஃபர்ஸ்ட் ஏஎம்டீ கியர்பாக்ஸ் விருப்பத்தையும் கொண்டிருக்கும்.
சிஎன்ஜி வெர்ஷனைத் தவிர, நெக்ஸான் விரைவில் டிசிடீ கியர்பாக்ஸ் வெர்ஷனை பெறும், இது பிரெஸ்ஸா, சோனெட் மற்றும் வென்யூ ஆகியவற்றிற்கு கடுமையான போட்டியை அளிக்கிறது, இது பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்