- எட்டு வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- நெக்ஸான் சிஎன்ஜியின் விலை ரூ. 8.99 லட்சத்தில் தொடங்குகிறது
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் மிகவும் பிரபலமான எஸ்யுவி மாடலான நெக்ஸானில் ஒரு புதிய சிஎன்ஜி விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நெக்ஸான் கார் இப்போது பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் விருப்பங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிறிய சிஎன்ஜி வெர்ஷன் எஸ்யுவி எட்டு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. நெக்ஸான் சிஎன்ஜியின் விலை ரூ. 8.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகிறது. இப்போது அறிமுகத்திற்குப் பிறகு, நெக்ஸான் சிஎன்ஜி காரும் நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களை சென்றடைய தொடங்கியுள்ளது.
மொத்தத்தில், சிஎன்ஜி பவர்ட் நெக்ஸான் ஆனது ஸ்மார்ட் (O), ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+S, ப்யூர், ப்யூர் S, கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ S ஆகிய எட்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, எட்டு ஸ்பீக்கர்கள், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நெக்ஸான் சிஎன்ஜி ஆனது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த எஸ்யுவி ஆனது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் + சிஎன்ஜி விருப்பத்துடன் வருகிறது, இது நாட்டின் முதல் எஸ்யுவி ஆகும். இந்த நிலையில் நெக்ஸான் சிஎன்ஜி 99bhp மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் என்னவென்றால், டூயல் சிஎன்ஜி சிலின்டர் டேங்க் தொழில்நுட்பத்திற்கு நன்றி, நெக்ஸான் சிஎன்ஜி வெர்ஷன் கார்களில் 321 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.
தற்போது, நெக்ஸான் சிஎன்ஜி மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியுடன் போட்டியிடுகிறது, இது ரூ. 9.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்