- மாருதி சுஸுகிக்குப் பிறகு மிகப்பெரிய சிஎன்ஜி போர்ட்ஃபோலியோ இதுக்கு உள்ளது
- டாடா ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜியை வழங்குகிறது
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் நாட்டின் முதல் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்களான டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜியை லான்ச் செய்தது. ட்வின் சிலிண்டர் டெக்னாலஜி உடன் கூடிய சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்திய இந்த பிராண்ட், கடந்த 24 மாதங்களில் 1.3 லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது.
தற்போது, வாடிக்கையாளர்கள் டாடாவின் டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச்சை நான்கு சிஎன்ஜி விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த மாடல்கள் அனைத்தும் பிராண்டின் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கிட் உடன் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சிஎன்ஜி டலில் கூட நல்ல பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. அதேசமயம் ஒற்றை சிலிண்டர் சிஎன்ஜி யூனிட்டில் பூட் ஸ்பேஸில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன.
நான்கு டாடா சிஎன்ஜி கார்களும் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளன, இது ட்வின் 30 லிட்டர் சிஎன்ஜி டேங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச் ஆகியவை ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெறுகின்றன. புதிய டியாகோ மற்றும் டிகோர் ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, பஞ்ச் மற்றும் ஆல்ட்ரோஸ் சிஎன்ஜியும் விரைவில் ஏஎம்டீ விருப்பத்துடன் வழங்கப்படும்.
இது தவிர, டாடா சமீபத்தில் பாரத் மொபிலிட்டி ஷோவில் சிஎன்ஜி நெக்ஸான் எஸ்யுவியை காட்சிப்படுத்தியது. நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டிலேயே முதல் டர்போசார்ஜ் சிஎன்ஜி கார் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோ குறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி அமித் காமத், “சிஎன்ஜி அதன் சுலபமாக கிடைக்கும் காரணமாக மிகவும் பிரபலமாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் பல தொழில்துறையை மாற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி சிஎன்ஜி பிரிவில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பம் சிஎன்ஜி கார்களின் பூட் ஸ்பேஸை அதிகப்படுத்தியுள்ளது. சிஎன்ஜி சந்தையில் உள்ள இரண்டு பெரிய பிராண்டுகளில் ஒன்றான டாடா, முந்தைய ஆண்டை விட 2024 நிதியாண்டில் 67.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்