- ஐந்து ஆண்டுகளில் டாடா ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது
- வரும் மாதங்களில் கர்வ் இவி மற்றும் கர்வ் ஐசிஇ வெர்ஷனை அறிமுகப்படுத்தும்
டாடா மோட்டர்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிராந்தியத்தில் ஒரு வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதை ஆராய்வதற்கான திட்டங்களை இது கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததிற்க்கு ஐந்து ஆண்டுகளில் தோராயமாக ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், இது 5,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.
வரும் மாதங்களில் டாடா தனது இவி மற்றும் ஐசிஇ கர்வ் ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்ந்து ஹேரியர் இவி மற்றும் சஃபாரி ஆகியவை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரும், அதே நேரத்தில் அல்ட்ரோஸ் ரேஸர் மற்றும் நெக்ஸான் சிஎன்ஜி ஆகியவை பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்