- ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கலாம்
- இந்த விலை உயர்வு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆடி இந்தியா மற்றும் மாருதி சுஸுகிக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸும் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து வாகனங்களின் விலைகளையும் ஜனவரி 2024 முதல் உயர்த்துவதை அறிவிக்கலாம். இருப்பினும், விலை உயர்வு குறித்து கார் தயாரிப்பு நிறுவனம் எதுவும் இதுவரை வெளியிடவில்லை. அதன் ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் டாடாவின் வரிசையில் தற்போது டியாகோ, டியாகோ இவி, டிகோர், டிகோர் இவி, அல்ட்ரோஸ், பஞ்ச், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகியவை அடங்கும். மற்ற செய்திகளில், டாடா சமீபத்தில் சண்டிகரில் ஒரு புதிய வாகன ஸ்கிராப்பிங் வசதியை (ஆர்விஎஸ்எஃப்) துவக்கியது. இந்த ஆர்விஎஸ்எஃப் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் ஆண்டுக்கு 12,000 வாகனங்களை மறுசுழற்சி செய்யலாம்.
டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எங்கள் பஸ்சேன்ஜ்ர் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை ஜனவரி 2024 இல் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். 'இது தொடர்பான சரியான விவரங்கள் சில வாரங்களில் அறிவிக்கப்படும்.' என்று டாடா அறிவித்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்