- ஹேரியர் தற்போது டீசல் இன்ஜினில் மட்டுமே கிடைக்கிறது
- அடுத்த ஆண்டு சியராவை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது
டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி ஹேரியரின் புதிய வெர்ஷனை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தியது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாராவுடன் போட்டியிடும் இந்த மாடல் டீசல் இன்ஜினில் மட்டுமே கிடைக்கிறது, இது விரைவில் பெட்ரோல் மற்றும் இவி வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்படும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியரின் பெட்ரோல் வேரியன்ட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளதாக அறிந்தோம். இந்த பெட்ரோல் வேரியன்ட் 2025 இல் அறிமுகப்படுத்தப்படும், மேலும் இந்த நேரத்தில்தான் வாகன உற்பத்தியாளர் எஸ்யுவியின் இவி வெர்ஷனையும் அறிமுகப்படுத்தும். ஹேரியரின் பெட்ரோல் வேரியன்ட்டின் வருகையுடன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுடன் போட்டியிடும்.
நெக்ஸான் போர்ட்ஃபோலியோ போன்ற எல்லா வேரியன்ட்ஸிலும் ஹேரியர் எஸ்யுவியை வழங்க டாடா திட்டமிட்டுள்ளது. நெக்ஸான் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் இவி இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் சிஎன்ஜி வெர்ஷனும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் சிஎன்ஜி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது, இதை நீங்கள் எங்கள் வெப்சைட்டில் பார்வையிடுவதன் மூலம் படிக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்