- ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்
- ஏசி ஃபங்ஷன்ஸ்க்கு ஹாப்டிக் டச் கண்ட்ரோல்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை ஷாட்ஸ்
டாடா மோட்டார்ஸ் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டை அதன் அறிமுகத்திற்கு முன்னதாக டெஸ்ட் செய்து வருகிறது, இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, அப்டேடட் மாடலின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரின் ஒரு புதிய தோற்றத்தை இந்த ஸ்பை ஷோட்ஸ் தருகிறது.
2024 ஹேரியர் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
இந்த படங்களில் காணப்படுவது போல், ஃபேஸ்லிஃப்டட் ஹேரியர், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டைப் போலவே டூ-ஸ்போக் மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீலைப் பெறுகிறது, இது சாலை டெஸ்டிஙில் காணப்பட்டது. இதன் சென்டர் கன்சோலில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏசி ஃபங்ஷன்ஸ்க்கு ஹாப்டிக் டச் கண்ட்ரோல்ஸ் உள்ளது. இந்த எஸ்யுவியில் எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக், டிரைவ் மோட்ஸ்க்கான ரோட்டரி டயல், பனோரமிக் சன்ரூஃப், புதிய கியர் லெவர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை உள்ளது.
புதிய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர் டிசைன் மற்றும் அப்டேட்ஸ்
2024 ஹேரியர் டெஸ்ட் மியூலின் தற்போதைய வெர்ஷனில் இருந்து எடுத்து பிளாக் அலோய் வீல்ஸைத் தவிர, மற்ற எல்லாம் கமௌபிளாஜ் செய்யப்பட்டுள்ளது. மேலே உள்ள புதிய எல்இடி டிஆர்எல்ஸ், கீழே வெர்டிகல் ஹெட்லைட் யூனிட்ஸ், ஒரு புதிய கிரில் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட பம்பர் ஆகியவற்றுடன் கார் திருத்தப்பட்ட லைட்டிங் அமைப்பைப் பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்டட் ஹேரியர் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் 168bhp மற்றும் 350Nm டோர்க்கை உருவாக்கும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டையும் வெளிப்படுத்தியது, இது ஹேரியர் மற்றும் சஃபாரி உடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்