- ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அடல்ட் பாதுகாப்பில் 33.05 மதிப்பை பெற்றது
- 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றது
சமீபத்தில் லான்ச் ஆனா க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டின் கீழ் டாடா மோட்டார்ஸ் ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டை அதிகாரப்பூர்வமாக சோதித்துள்ளது, மேலும் இந்த இரண்டு மாடல்ஸும் ஃபைவ் ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
அடல்ட் பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய ஹேரியர் 34 புள்ளிகளில் 33.05 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் குழந்தை பாதுகாப்பு 49 புள்ளிகளில் 45 ஆக இருந்தது. இதே புள்ளிவிவரங்கள் சஃபாரிக்கும் பொருந்தும்.
ஃபேஸ்லிஃப்ட் டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஆறு ஏர்பேக்ஸ், இபிடிஉடன் ஏபிஎஸ், இஎஸ்பீ, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன், சீட்-பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் டீபீஎம்எஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. புதிய டாடா ஹேரியரின் டாப் மாடல் ஃபியர்லெஸ்+ வேரியண்ட் டிரைவரின் முழங்கால்களைப் பாதுகாக்க தனி ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஹேரியரின் அட்வென்ச்சர் A+ வேரியண்ட்டிலிருந்து ஏடாஸ் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.