- மேனுவல் வேரியண்ட்ஸின் எஃபிஷியன்சி மேம்படுத்தியுள்ளது
- ரூ. 25,000 இல் புக்கிங் செய்யலாம்
சமீபத்தில், டாடா மோட்டார்ஸ் தனது ஃபிளக்ஷிப் எஸ்யுவி மாடல்ஸான ஹேரியர் மற்றும் சஃபாரியின் புக்கிங்ஸை ரூ. 25,000 மற்றும் ரூ. 21,000 தொகையில் வழங்கியுள்ளது மற்றும் வடிக்கையாளர்கள் டாடா டீலர்ஷிப்ஸில் இந்த மாடல்ஸை முன்பதிவு செய்யலாம். இப்போது, ஆஃபீஷியல் லான்ச்க்கு முன்பே, இதன் உற்பத்தியாளர் அப்டேடட் ஹேரியரின் ஃபியூல் எஃபிஷியன்சி விவரங்களை வெளியிட்டுள்ளது.
புதிய டாடா ஹேரியர், BS6 ஃபேஸ் 2.0-இணக்கமான 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. 168bhp மற்றும் 350Nm டோர்க் வெளியீடு அப்படியே இருந்தாலும், இந்த எஸ்யுவியின் மைலேஜ் அப்டேட்டுடன் அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஹேரியர் எஸ்யுவியின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸ் முறையே லிட்டருக்கு 16.35 கி.மீ மற்றும் 14.6 கி.மீ ஃபியூல் எஃபிஷியன்சியை அளித்தன. இதற்கிடையில், ஹேரியரின் அப்டேடட் வெர்ஷன் முறையே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வெர்ஷன்ஸ் லிட்டருக்கு 16.8 கி.மீ மற்றும் 14.6 கி.மீ ஃபியூல் எஃபிஷியன்சியை கொண்டது.
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா XUV700, ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் கார்ஸுடன் போட்டியைத் தொடரும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்