டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் எப்போது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் ஆனது?
டாடா மோட்டார்ஸ் புதிய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் அக்டோபர் 17, 2023 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த எஸ்யுவி இன்ஜினில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லாமல் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் மாற்றங்களுடன் வருகிறது. இது 7 வண்ண விருப்பங்களுடன் 10 வேரியண்ட்ஸில் ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வழங்கபடுகின்றன. இந்த ஃபிளாக்ஷிப் 5-சீட் எஸ்யுவியில் செக்மென்ட் ஃபர்ஸ்ட் அம்சங்களுடன் வந்த முதல் இந்தியா கார் ஆகும். இந்தக் கட்டுரையில், 2023 டாடா ஹேரியரை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு வெளிப்படுத்திருக்கோம்.
புதிய டாடா ஹேரியர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
ஃபேஸ்லிஃப்ட் டாடா ஹேரியர் புதிய வண்ணங்கள், அம்சங்கள் மற்றும் முன்பை விட ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. இது சன்லிட் எல்லோ, கோரல் ரெட், பெப்பிள் க்ரே, லூனார் ஒயிட், ஓபெரான் பிளாக், சன்வீட் க்ரீன் மற்றும் அஷ் க்ரே ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் சன்லிட் எல்லோ எங்களின் தனிப்பட்ட விருப்பமான நிறம் ஆகும். ஒரு புதிய பாராமெட்ரிக் ஸ்ப்ளிட் கிரில் மூலம், இந்த வண்ணம் புதிய ஹேரியரை ஆக்ரோஷமாகவும் மற்றும் அழகாகவும் காமிக்கிறது.
உபகரணங்களைப் பற்றி பேசுகையில், அப்டேடட் ஹேரியரில் ஜேபிஎல் 10-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டத்துடன் கூடிய பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், நேவிகேஷன் ஆதரவுடன் கூடிய ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-கண்ட்ரோல்ட் எச்விஏசி பேனல் போன்ற அம்சங்களும் உள்ளன. இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கூடவே இதில் ஏர் ப்யூரிஃபயர், டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் மூட் லைட்டிங், பவர்ட் டெயில்கேட், வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது.
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் பாதுகாப்பான கார் என்று சொல்ல முடியுமா?
கன்டிப்பாக இது ஒரு பாதுகாப்பான கார் என்று சொல்ல முடியும், ஹேரியரில் ஏழு ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் டிஸ்செண்ட்மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட்ஸ், டீபீஎம்எஸ், ஐசோஃபிக்ஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், அப்டேடட் ஏடாஸ் தொகுப்பு மற்றும் ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக். ஜிஎன்கேப்பில் டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றது.
டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் எது சிறப்பாக இல்லை?
மொத்தத்தில், புதிய டாடா ஹேரியர் ஒரு சிறந்த தயாரிப்பு ஆகும், ஆனால் எங்கள் முதல் டிரைவ் மதிப்பாய்வில் சில சிறிய சிக்கல்களை நாங்கள் இதில் எதிர்கொண்டோம். பொதுவான சிக்கல்களுக்கு வரும்போது, வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் போர்ட்ஸ் சேரிய வேலை செய்யவில்லை மற்றும் இடம் கஷ்டமாக இருந்தன. ஃபிட் மற்றும் ஃபினிஷ் ஆகியவை சென்டர் கன்சோல் பகுதி மற்றும் டோர் பேட்ஸைச் சுற்றி சீரற்றதாக இருக்கும், இது சிறப்பாக இருக்கும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் நாம் நினைத்தது போல் சீரானது அல்ல. போட்டியுடன் ஒப்பிடுகையில், டாடா மோட்டார்ஸ் எஸ்யுவி இரட்டையரைடீசல் இன்ஜினுடன் மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், அடுத்த ஆண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருபத்திலும் கிடைக்கும். இதனால் ஹேரியர் பலன் அடைய வாய்ப்புள்ளது
டாடா ஹேரியர் வாங்குவதற்கு சரியான வேரியண்ட் எது?
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அட்வென்ச்சர் + A, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் டார்க், ஃபியர்லெஸ் + மற்றும் ஃபியர்லெஸ் + டார்க் ஆகிய 10 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இதில், அட்வென்ச்சர் ரேஞ்ச் சரியான வேரியண்ட் ஆகும், ஏனெனில் இதன் விலை ரூ. 20.19 லட்சம் முதல் ரூ. 24.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த விலை ரேஞ்சில் பல்வேறு புதிய அம்சங்களைக் நீங்கள் காணலாம். வாடிக்கையாளர்கள் அட்வென்ச்சர் வேரியண்ட்டின் டார்க் எடிஷனை ரூ. 22.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட ஹேரியர் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய டாடா ஹேரியர் அதே 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த இன்ஜின் BS6 2.0-இணக்கமானது மற்றும் 168bhp மற்றும் 350Nm டோர்க்கை 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இனைக்கபடுகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்