- ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் ஏழு வண்ண விருப்பங்களுடன் 10 வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- இதில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் உள்ளது
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்தது. இந்த அப்டேட்ட ஹேரியர் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, அதன் முன்பதிவு ரூ. 25,000 டோக்கன் தொகைக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது ஏழு வண்ண விருப்பங்களுடன் 10 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது.
புதிய ஹேரியர் எக்ஸ்டீரியர்
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டில் முன் மற்றும் பின்புறத்தில் புதிய பம்பர்ஸ், சில்வர் இன்சர்ட்ஸுடன் கூடிய புதிய கிரில், எல்இடி டிஆர்எல்ஸ், கனெக்டெட் எல்இடி லைட் பார்ஸ், புதிய ஏர் டேம், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்க்கான முக்கோண ஹவுசிங், முன் மற்றும் பின்புறம் எல்இடி லைட் பார்ஸ், சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ், புதிய 19-இன்ச் அலோய் வீல்ஸ், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ஹை மவுண்ட்டெட் ஸ்டாப் லேம்ப், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை கிடைக்கின்றன.
2023 ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர்
அப்டேட்ட் ஹேரியர் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸ், ரியர் சன்ஷேட்ஸ் மற்றும் டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் அமைப்பு ஆகியவற்றைப் பெறுகிறது. இது தவிர, மல்டிபிள் ஃபங்ஷன் யூனிட்ஸுடன் கூடிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் பேக்லைட் கூடிய டிஜிட்டல் டாடா லோகோ, ஐஆர்ஏ- கனெக்டெட் கார் டெக்னாலஜி, ஏடாஸ், 360 டிகிரி கேமரா, பேடில் ஷிஃப்டர்ஸ், இரண்டாவது வரிசைக்கான வசதியான ஹெட்ரெஸ்ட்ஸ் மற்றும் ஜெஸ்ச்சர் கண்ட்ரோல் கொண்ட பவர்ட் டெயில்கேட் வழங்கப்படுகிறது.
புதிய டாடா ஹேரியர் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ண விருப்பங்கள்
ஃபேஸ்லிஃப்ட் ஹேரியர் ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அட்வென்ச்சர்+ A, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் டார்க், ஃபியர்லெஸ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ டார்க் போன்ற பத்து வேரியண்ட்ஸிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். வண்ண விருப்பங்களைப் பற்றி பேசுகையில், இது சன்லிட் எல்லோ, கோரல் ரெட், பெப்பிள் க்ரே, லூனார் ஒயிட், ஓபேரான் பிளாக், சன்வீட் க்ரீன் மற்றும் அஷ் க்ரே ஆகிய ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது.
ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
புதிய டாடா ஹேரியரில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் உள்ளது, இது BS6 ஃபேஸ் 2 ஆம் கட்ட விதிமுறைகளின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கkன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 168bhp மற்றும் 350Nm டோர்க் திறனை வெளியிடுகிறது.