- வரும் வாரங்களில் இதன் விலை அறிவிக்கபடலாம்
- சில காஸ்மெட்டிக் அப்டேட்டை பெறுகிறது
இந்த மாத தொடக்கத்தில், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் ஹேரியர் மற்றும் சஃபாரியை அறிமுகப்படுத்தியது. 25,000 ரூபாய்க்கு டோக்கன் தொகையை குடுத்து அதிகாரப்பூர்வமான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்து வேரியண்ட்ஸில் கிடைக்கும். இந்தக் கட்டுரையில் ஐந்து சீட்ஸ் கொண்ட எஸ்யுவியின் பேஸ் வேரியண்ட்டை பற்றி சொல்லப் போகிறோம்.
இங்குள்ள படங்களில் காணப்படுவது போல், புதிய ஹேரியர் ஸ்மார்ட் (O) வேரியண்ட் முக்கோண ஹெட்லேம்ப் ஹவுசிங், பிளாக்-அவுட் கிரில் மற்றும் ஓஆர்விஎம்’ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், எல்இடி லைட் பார்ஸ் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் 17-இன்ச் சில்வர் அலோய் வீல்ஸுடன் வழங்கப்பட்டுள்ளன. இன்டீரியரில், ஆறு ஏர்பேக்ஸ், டீபீஎம்எஸ், புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டச் அடிபடையிலான ஏசி கண்ட்ரோல்ஸ், மேனுவல் ஹேண்ட்ப்ரேக், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இரண்டாவது வரிசையில் ஏசி வென்ட்ஸ் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் ஃபங்ஷன் கொண்ட இரண்டாவது வரிசை சீட்ஸ் போன்ற ஃபங்ஷன் உள்ளன.
டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் டாப்-மாடல் ஃபியர்லெஸ்+ வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில், பேஸ் வேரியண்ட்டில் ஜேஷ்டர் மூலம் இயங்கும் டெயில்கேட், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், ஃப்ரண்ட் வென்டிலேட்டட் சீட்ஸ், ஏடாஸ், பனோரமிக் சன்ரூஃப், ரியர் விண்டோ சன்ஷேட் ஆகியவற்றுடன் வருகிறது
புதிய டாடா ஹேரியரில் தற்போதைய மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர், ஃபோர் சிலிண்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 168bhp மற்றும் 350Nm டோர்க்கை உருவாக்குகிறது. கார் உற்பத்தியாளர் அதன் மைலேஜையும் வெளிப்படுத்தியுள்ளார், அதற்காக நீங்கள் எங்கள் இந்த கட்டுரையைப் படிக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்